சென்னை மக்களே..! 10 வருட கஷ்டம் நீங்கப்போகுது.. இனி உங்களுக்கு வசந்தகாலம் தான்..!

By ezhil mozhiFirst Published Jul 30, 2019, 1:01 PM IST
Highlights

அண்ணா சாலையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒரு வழி பாதை, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

சென்னை மக்களே..! 10 வருட கஷ்டம் நீங்கப்போகுது.. இனி உங்களுக்கு வசந்தகாலம் தான்..! 

அண்ணா சாலையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒரு வழி பாதை, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. குறிப்பாக அண்ணாசாலையில் சுரங்க பாதை அமைப்பதற்காக போக்குவரத்து பாதை மாற்றப்பட்டது. அதன்படி எல்ஐசி யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணா சாலை வழி மூடப்பட்டது. அதற்கு பதிலாக ஜெனரல் பேட்டர்ஸ்  சாலை,  ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மற்றும் சத்தியம் தியேட்டர் வழியாக மட்டுமே அண்ணா சாலையில் இணைய முடியும்.

அதாவது நீண்ட தூரம் பயணம் செய்து மீண்டும் அண்ணா சாலையில் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டு வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதன்காரணமாக மணிக்கூண்டு பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.

இந்தநிலையில் அண்ணா சாலையில் மெட்ரோ சுரங்க பாதை பணிகள் முடிவடைந்து உள்ளதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அண்ணா சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதற்கான ஒரு சில பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு இரு வழிப்பாதை நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அருண் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனையின் பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அருண். அதில் குறிப்பாக நந்தனம் சிக்னல் பகுதியில் கடந்த 26ஆம் தேதி முதல் சோதனை ஓட்டமாக ஏற்கனவே இருந்தது போல போக்குவரத்தை மாற்றி உள்ளனர்... எனவே பொதுமக்கள் தற்போது அவர்கள் வசதிக்கு ஏற்ப பயணிக்க முடிகிறது. நந்தனம் பகுதியிலும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் முற்றிலும் நறைவு பெற்றுள்ளது என தெரிவித்து இருந்தார்.

click me!