
குழந்தைகளை நன்றாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பேசும் சில விஷயங்கள் அது அவர்களது மனம் மற்றும் உடல் அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக்கூடாத 8 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக்கூடாத விஷயங்கள்:
1. விவாகரத்து விஷயங்கள் :
பெற்றோர்களே நீங்கள் உங்களது திருமண வாழ்க்கையில் நிறைய கருத்து வேறுபாடுகள், பிரச்சினை இருந்தால் விவாகரத்து செய்ய திட்டமிருந்தால் அதை குழந்தைகள் முன் ஒருபோதும் வெளிப்படையாக பேச வேண்டாம். அவர்கள் அறிந்தால் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படுவார்கள்.
2. வேலை மன அழுத்தம்
வேலையில் நீங்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால் அதை குழந்தைகளுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அல்லது குழந்தைகள் முன் அது குறித்து மற்றவர்களிடம் பேசாதீர்கள். ஏனெனில் இது அவர்களுக்கு தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி விடும்.
3. இறப்பு
பெற்றோர்களே குழந்தைகள் முன் ஒருபோதும் மரணத்தை பற்றி பேச வேண்டாம். இது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஒருவேளை குழந்தைகள் இது குறித்து கேள்வி ஏதேனும் கேட்டால் உடனே அந்த பேச்சை மாற்றி விடுங்கள் அல்லது மென்மையாக கையாளுங்கள்.
4. நிதி பிரச்சனை
குழந்தைகள் முன் நிதி பிரச்சனையை ஒருபோதும் பேச வேண்டாம். இது குழந்தைகளுக்கு குடும்ப ஸ்திரத்தன்மை, எதிர்காலம் குறித்த தேவையற்ற பயம், மன அழுத்தம், பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும்.
5. உடல்நல பிரச்சினைகள் :
பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் முன் உடல்நல பிரச்சனைகள் அல்லது சிகிச்சைகள் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. இதுபோன்ற விவாதங்களை நாசூக்காக கையாளுங்கள்.
6. பாலியல் தலைப்பு
பெற்றோர்களே எக்காரணம் கொண்டும் குழந்தைகள் முன் இந்த விஷயங்களை ஒருபோதும் பேசவே கூடாது. அது அவர்களுக்கு நல்லதல்ல. அப்படி நீங்கள் பேசினால் அது குறித்த ஆர்வம் அவர்களுக்கு அதிகரிக்கும். எனவே சிறு வயதிலிருந்து இந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் ஒருபோதும் பேசவே வேண்டாம்.
7. பிறரை பற்றிய விமர்சனம்
பெற்றோர்களை குழந்தைகள் முன்னிலையில் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை பேசாதீர்கள். அது அவர்களையும் எதிர்மறையாக உணர வைக்கும்.
8. அரசியல்
சர்ச்சைக்குரிய அரசியல் விஷயங்களை பற்றி குழந்தைகள் முன் பேச வேண்டாம். இது அவர்களுக்கு குழப்பத்தையும், தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே இது போன்ற விஷயங்களை குழந்தைகள் முன் பேசாமல் இருப்பது தான் நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.