பொங்கலுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை ...! உற்சாகத்தில் மாணவர்கள்...!

thenmozhi g   | Asianet News
Published : Jan 11, 2020, 03:36 PM IST
பொங்கலுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை ...!  உற்சாகத்தில் மாணவர்கள்...!

சுருக்கம்

புதுவை அரசு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என இரண்டு நாட்களும் கூடுதலாக விடுமுறை அளித்து புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை ...! உற்சாகத்தில் மாணவர்கள்...! 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அடுத்த வாரம் வர உள்ள நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 15 16 17 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக வருகிறது.

இதற்கிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையும் விடுமுறை இருந்தால் தொடர் விடுமுறை கிடைக்கும் என்றும் பிள்ளைகளுடன் சொந்த ஊருக்கு சென்று வர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புதுவை அரசு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என இரண்டு நாட்களும் கூடுதலாக விடுமுறை அளித்து புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் 20ஆம் தேதி தான் மீண்டும் பள்ளி திறக்க என்பதால் நாளை முதல் தொடர்ந்து மாணவர்களுக்கு ஏற்ற நாள் விடுமுறை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்தும் வருமா என்று இப்போது தமிழக மாணவர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்