அடுத்த அதிர்ச்சி! மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதி..! தமிழகத்தில் மொத்தம் 485 பேர் பாதிப்பு!

By ezhil mozhiFirst Published Apr 4, 2020, 7:08 PM IST
Highlights

இந்தியாவில் தற்போது வரை 2902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.184 பேர் குணமடைந்து உள்ளனர்.68 பேர்  உயிரிழந்துள்ளனர்.இந்தநிலையில் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதே போன்று  கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

அடுத்த அதிர்ச்சி!  மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதி..! தமிழகத்தில் மொத்தம் 485 பேர் பாதிப்பு! 

தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் உள்ள 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டு தமிழகம்  திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது வரை 2902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.184 பேர் குணமடைந்து உள்ளனர்.68 பேர்  உயிரிழந்துள்ளனர்.இந்தநிலையில் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதே போன்று  கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

தற்போதைய நிலவரப்படி கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிதாமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

பாதிக்கப்பட்டவர்களை சதவீதத்தின் அடிப்படையில் வைத்து பார்த்தால், 0 - 20 வயதினர்- 9%, 21-40 வயதினர் 42%, 41-60 வயதினர் -33%, 61 வயதுக்கு மேல் 17% என்பது கவனிக்கத்தக்கது 

டெல்லி மாநாடு

சமீபத்தில் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் டெல்லி மாநாடு சென்று  திட்டுபியவர்களாக தான் உள்ளனர். இதனை கண்டறிந்த உடன் தற்போது வரை 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 73 பேர்  டெல்லி சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் கொரோனா தோற்று பரவினால் இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தை முந்தி தமிழகம்  முதலிடம் பிடிக்கும் அபாயம் உள்ளது 

click me!