உங்க மகனுக்கு இந்த '7' விஷயங்களை சிறுவயதிலேயே கண்டிப்பா சொல்லி கொடுங்க..!

Published : Feb 24, 2025, 06:48 PM IST
உங்க மகனுக்கு இந்த '7' விஷயங்களை சிறுவயதிலேயே கண்டிப்பா சொல்லி கொடுங்க..!

சுருக்கம்

Parenting Tips : ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகன்களுக்கு சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கியமான 7 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகன் வெற்றிகரமாகவும் பொறுமையுள்ளவனாகவும் பண்பட்டவனாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு குழந்தை பருவத்தில் இருந்தே சில நல்ல பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை மதிப்புகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது இது சாத்தியமாகும். ஒரு ஆண் குழந்தையின் பெற்றோரின் வளர்ப்பில் அவனது பிரதிபலிப்பு தெரியும் என்று கூறப்படுகிறது. ஒரு பிள்ளையின் நடத்தை மற்றும் எண்ணங்களில் இருந்து மக்கள் அவனுடைய பெற்றோரிடம் இருந்து என்ன மாதிரியான மதிப்புகளை பெற்றுள்ளது என்பதை சுலபமாக தீர்மானிக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம் என்னவென்றால் தங்கள் மகன் ஒரு சிறந்த மனிதனாக மாறி தங்கள் பையருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். எனவே இன்றைய பதிவில் உங்கள் மகன் நல்ல மனிதனாக மாற விரும்பினால் நிச்சயமாக இது கொடுக்கப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்களை சிறுவயதிலேயே அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய 7 விஷயங்கள்:

1. மற்றவர்களை மதிப்பது:

பெரியவர்களே மதிப்பதும்,  இளையவர்களை நேசிப்பது மிக முக்கியம் என்பது உங்களது மகனுக்கு கற்றுக் கொடுங்கள். பெற்றோர் ஆசிரியர் அன்னையர் என அனைவரிடமும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் அதன்படி நடந்து கொள்வார்கள்.

2. தன்னம்பிக்கையாக இருக்க கற்றுக் கொடுங்கள்:

உங்களுடைய மகனுக்கு சிறிய வேலைகளை செய்ய பழக்கப்படுத்துங்கள். அப்படி அவனுக்கு கற்றுக் கொடுக்கும் போது அவன் தன்னுடைய வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று தானே கற்றுக் கொள்வான். அதாவது ஸ்கூலுக்கு கிளம்புதல், ஷூக்கு பாலிஷ் போடுதல், துணிகளை சரியான இடத்தில் வைத்தால் போன்றவற்றை அவனே செய்ய கற்றுக் கொடுங்கள்.

இதையும் படிங்க:  மாணவர்களிடையே உருவாகும் தற்கொலை எண்ணம்.. தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்!! 

3. வீட்டு வேலைகள்:

மகள் மட்டுமல்ல மகனுக்கும் வீட்டு வேலைகளை கற்றுக்கொடுங்கள். வீடு துடைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, உணவு சமைப்பது, துணிகளை மடித்து வைப்பது போன்ற கற்றுக் கொள்ளுங்கள்.

4. நேர்மை மற்றும் உண்மை:

பொய் மற்றும் ஏமாற்றுதல் எந்த வெற்றிக்கும் அடித்தளமாக இருக்கக் கூடாது என்பதே உங்களது மகனுக்கு கற்றுக் கொடுங்கள். அதற்கு பதிலாக நேர்மை, கடின உழைப்பு மற்றும் உண்மையின் மதிப்பை அவனுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். மேலும் இவை கல்வி வாழ்க்கையில் எப்போதுமே பயனுள்ளதாக இருக்கும் என்று எடுத்துச் செல்லுங்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் போது 'இந்த' தப்ப பண்ணாதீங்க!

5. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை:

தன்மீது தன்னம்பிக்கை வைப்பது ரொம்பவே முக்கியம் என்று உங்களது மகனுக்கு புரிய வைக்கவும். எந்த ஒரு சவால் வந்தாலும் அதை தைரியத்துடனும்,  பொறுமையுடனும் எதிர்கொள்ள உங்களது மகனுக்கு கற்றுக் கொடுங்கள். தன்னை நம்புவது மட்டுமே எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளையும் கூட மிக எளிதாக கையாள முடியும் என்று சொல்லிக் கொடுங்கள்.

6. பெண் குழந்தைகளை மதிப்பது:

உங்கள் மகனுக்கு சிறுவயதில் இருந்தே பெண்கள் சமம் என்று கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமின்றி அவர்களுக்கு மதிப்பு கொடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சொல்லிக் கொடுங்கள். மேலும் பெண்களை எப்போதும் மரியாதையுடன் நடத்தவும், அவர்களின் சம்மதத்தை மதிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுங்கள்.

7. தோல்விகளை ஏற்றுக்கொள்:

வெற்றி முக்கியம் தான் ஆனால் திறந்த மனதுடன் தோல்வியையும் ஏற்றுக் கொள்ளுமாறு கற்றுக் கொடுங்கள். தோல்வியில் இருந்தே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேறுவதே உண்மையான வெற்றி என்று உங்களது மகனுக்கு புரிய வைக்கவும். உங்களது மகன் ஏதாவது தோல்வியை சந்தித்தால், அதை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொடுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்