அதிர வைக்கும் செய்தி.. தனியார் பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளி இழுத்து மூடி சீல்..!

By vinoth kumar  |  First Published Sep 29, 2021, 3:58 PM IST

கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

பெங்களூரு அருகே தனியார் பள்ளியில் பயிலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளி வளாகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து, அந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில், 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 44 மாணவிகளும், தமிழகத்தை சேர்ந்த 16 மாணவிகளும் அடங்குவர். இதனையடுத்து, பள்ளி வளாகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த பள்ளியின் மாணவர்கள் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்களும், விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பியதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!