இனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.. வெளியானது அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 24, 2021, 5:25 PM IST
Highlights

நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்கு பெண் காவலர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனாலும், காவல் பணிகளில் அதிகளவு பணிச்சுமைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பெண் காவலர்கள் எதிர்கொண்டு வந்தனர். 

பெண் போலீசாரின் பணி நேரம் 12 மணிநேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்திருப்பதாக மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்கு பெண் காவலர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனாலும், காவல் பணிகளில் அதிகளவு பணிச்சுமைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பெண் காவலர்கள் எதிர்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார்.

மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.. இந்த உத்தரவானது பெண் காவலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சில இடங்களில் இந்த முறை அமலில் இருந்தாலும், மாநிலம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!