கழிவறை கட்ட சொல்லி ரூ.540 கோடி ஒதுக்கினால்.. நடுவுல இருக்குற அதிகாரிகள் பண்ண அசிங்கத்தை பாருங்க..!

By ezhil mozhiFirst Published Feb 12, 2020, 1:08 PM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் 540 கோடி மதிப்பில் ஏழை எளிய மக்களுக்கு கழிப்பறைகள் கட்டி  கொடுக்காக்கப்பட்டு உள்ளதாக கணக்கு காண்பித்து, அதற்கான பணத்தை சொந்த செலவுக்கு  எடுத்து ஜல்சா செய்து உள்ள அதிகாரிகளின் முகத்திரை கிழிய தொடங்கி உள்ளது 

கழிவறை கட்ட சொல்லி ரூ.540 கோடி ஒதுக்கினால்.. நடுவுல இருக்குற அதிகாரிகள் பண்ண அசிங்கத்தை பாருங்க..! 

கழிப்பறைகள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.540 கோடியில் பல கோடி ரூபாய் பணத்தை ஆட்டைய போட்டு உள்ளனர் அதிகாரிகள்

மத்திய பிரதேசத்தில் 540 கோடி மதிப்பில் ஏழை எளிய மக்களுக்கு கழிப்பறைகள் கட்டி  கொடுக்காக்கப்பட்டு உள்ளதாக கணக்கு காண்பித்து, அதற்கான பணத்தை சொந்த செலவுக்கு எடுத்து ஜல்சா செய்து உள்ள அதிகாரிகளின் முகத்திரை கிழிய தொடங்கி உள்ளது 

கடந்த 2012-ம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள  மக்களுக்குபிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிவறைகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக  540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது 

அதன் படி 2012 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதற்கான புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், பயனாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து  இருந்தனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் எந்த  ஒரு வேலையையும் முழுமை பெறாமல் இருந்து உள்ளது. இதனை எதிர்த்து  சில பழங்குடியின கிராம மக்கள் கேள்வி எழுப்பியதன் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது 

இதுதொடர்பாக லக்காட்ஜம் பஞ்சாயத்தில் எழுந்த புகாரை அடுத்து அரசுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரிடமிருந்து 7 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

என்னதான் நல்ல நல்ல திட்டங்கள் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தாலும் அதற்கெல்லாம் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அதிகாரிகள் என்ற பெயரில் நடுவில் இருக்கும்  கருப்பு ஆடுகளால் மக்களுக்கு எந்த பலனும் கிடைபெறாமல் உள்ளது. மற்றொரு பக்கம் மத்தியில் ஆளும் பாஜக மீதும் அதிருப்தி ஏற்டுகிறது. இதன் காரணமாக ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இதற்கேல்லாம் ஓர் தீர்வு கிடைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

click me!