வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..! மக்கள் குஷியோ குஷி...!

By ezhil mozhiFirst Published Dec 4, 2019, 4:37 PM IST
Highlights

இந்த திட்டத்திற்கு பெயர் ஆரோக்கிய ஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி அறுவை சிகிச்சை செய்த பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..! மக்கள் குஷியோ குஷி...! 

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் எந்தெந்த வாக்குறுதி கொடுத்து வாக்குகளை பெற்று முதல்வரானரோ அதற்கெல்லாம் பலனாக மக்களுக்கு சொன்ன வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

அதையும் தாண்டி பல நன்மைகளையும் அதிரடியாக அறிவித்து மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் அவர்கள் ஓய்வு எடுக்கும் காலங்களில் ஒருநாளைக்கு  ரூ.225 வீதம் மாதத்திற்கு 5000 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த ரூபாய் அவர்களது நேரடி வங்கி கணக்கில் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கு பெயர் ஆரோக்கிய ஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி அறுவை சிகிச்சை செய்த பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 26 சிறப்பு பிரிவுகளில் 836 விதமான அனைத்து வகை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கும் இந்த நிதியுதவி வழங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ஆண்டு வருமானம் 5 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். இந்த ஒரு அற்புதமான திட்டத்தில் டெங்கு நோயும் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் மதல் முழு வீச்சில் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

click me!