Buying a house: சொந்த வீடு வாங்க போறீங்களா..? இனி இந்த 5 விஷயங்களையும் கொஞ்சம் கவனிக்க..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 04, 2022, 09:17 AM IST
Buying a house: சொந்த வீடு வாங்க போறீங்களா..? இனி இந்த 5 விஷயங்களையும் கொஞ்சம் கவனிக்க..!!

சுருக்கம்

பல்வேறு, இன்னல்களை கடந்து சொந்த வீடு வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள். 

''வீட்டைக்  கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்'' என்று நம் முன்னோர்கள் தெரியாமையை சொன்னாங்க. ஆம், சொந்த வீடு வாங்குவது என்பது நம் எல்லோரின் கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிவிட்டால் அதை விட ஆனந்தம் வேறு என்ன இருக்கு. அந்த அளவிற்கு சொந்த வீட்டின் கனவு ஒவ்வொருவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவை. அப்படி சொந்த வீடு வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்றின் தாக்கம், காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வீடு வாங்கும் எண்ணத்தை ஒத்திப் போட்டவர்கள் தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருந்து வேலை செய்யும்  நடைமுறை பலருக்கும், “வசதியான சொந்த வீடு வேண்டும்” என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 ஜனவரியில் 8% என்ற அளவில் இருந்த வீட்டுக் கடன் வட்டி, தற்போது 6.65% என்ற அளவில் குறைந்துள்ளது. அரசும் பல்வேறு வகைகளில் சாமான்ய மக்களை வீடு வாங்க ஊக்குவித்து வருகிறது.

சரியான பில்டரைத் தேர்வு செய்வது:

சரியான பில்டரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். அவருடைய வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். பில்டர் இதற்குமுன் கட்டிக் கொடுத்த வீடு களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும்.மேலும், அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. 

அடிப்படை வசதிகள் பார்ப்பது அவசியம்:

போக்குவரத்து வசதி இருக்கிறதா, மருத்துவமனை வசதி இருக்கிறதா, கல்லூரிகள், பள்ளி கூடங்கள் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். அவசர பட்டு வாங்கி விட்டு பின்னல் கஷ்டப்பட கூடாது. 
அவர்கள் நீண்ட தூரம் அலையும்போது, படிப்பு பாதிக்கப்படும். எனவே, வீடு என்பது வசிக்க அத்தியாவசிய வசதிகளுடன் இருப்பது மிக அவசியமாகும்.

வங்கி:

ஒரு வங்கியில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, மற்ற கட்டணங்கள் ஏதேனும் உண்டா? மாத தவணை எவ்வளவு? முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்தினால் அதற்கு எவ்வளவு கட்டணம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விலையை நான்கு பக்கமும் விசாரித்து வைத்து கொள்ள வேண்டும்:

வீடு வாங்குபவர்களுக்குப் பல பேர் மனையோ, வீடோ என்ன விலை போகிறது என அக்கம்பக்கத்தில் விசாரிப்ப தில்லை. மனை வாங்கி வீடு கட்டி சென்ற பிறகு அல்லது கட்டிய வீட்டை வாங்கி குடியேறிய பிறகு, புரொமோட்டர் அல்லது பில்டர் என்னிடம் அதிக விலைக்கு இடம் அல்லது வீட்டை விற்று என்னை ஏமாற்றிவிட்டார் என்பார்கள். சிலர் குறைந்த விலைக்கு வாங்கி அவஸ்தை படுவதும் உண்டு.

ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்:

ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக முக்கியம். வீடு கட்டுமானம், டிசைன், லொகேஷன் எல்லாம் அருமை யாக இருந்து, ஆவணங்களில் ஏதாவது பிரச்னை எனில், ஒட்டு மொத்தமாகப் பணமும் நிம்மதியும் போய்விடும். நாளைக்கு விற்கும் போது சிக்கல் ஏற்படும் அல்லது விலை குறைத்துக் கொடுக்க வேண்டி வரும்.குறிப்பாக, சட்டமும் அரசாங்கமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்