கேரளாவின் நட்சத்திரகுடும்பம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரேநாளில் திருமணம்: காத்திருக்கும் 5-வது பிறந்த சகோதரர்

Published : Nov 08, 2019, 08:37 AM IST
கேரளாவின் நட்சத்திரகுடும்பம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரேநாளில் திருமணம்: காத்திருக்கும் 5-வது பிறந்த சகோதரர்

சுருக்கம்

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது, அவர்களுடன் 5-வதாக பிறந்த சகோதரர் திருமணத்துக்கான பணிகளை செய்து வருகிறார். 

கடந்த 1995-ம் ஆண்டு, நவம்பர் 18-ம்தேதி திருவனந்தபுரம் மாவட்டம், பொத்தன்கோடு நானுட்டுகாவு கிராமத்தில் அந்த செய்தி மிகவும் பிரபலம். பிரேம்குமார், ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேரளாவில் அனைத்து இடங்களிலும் பரவியது. ஒரு நிமிட இடைவெளியில் இந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஏறக்குறைய  பார்ப்பதற்கு ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.   


உத்ரம் நடத்திரத்தில் பிறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுக்கும் உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா என்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என்றும் பெயர் வைத்தனர். இந்த குழந்தைகளி்ன் தந்தை பிரேம் குமார் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்னம் என்று வைத்தார். 
தனது குழந்தைகள் 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் வாங்குவது பெரிய சிரமமாக இருந்தது. 

ஒரேநாளில் இந்த 5 குழந்தைகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த 5 குழந்தைகளின் படிப்பதையும், வளர்வதையும் கேரள ஊடங்கங்கள் அவ்வப்போது கொண்டாடி செய்திகளை வெளியிட்டு வந்தன. 
இந்நிலையில் பிரேம்குமார் செய்து வந்த தொழில் நஷ்டம் ஏற்படவே தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் இறக்கும்போது இந்த 5 குழந்தைகளுக்கும் 9 வயதில் இருந்தனர். 

பிரேம்குமார் மனைவி ரமாதேவி இதய நோயாளி என்பதால் இந்த குழந்தைகள் 5 பேரையும் எவ்வாறு வளர்க்கப்போகிறேன் என்ற கலக்கத்தில் இருந்தார். 
இந்த 5 குழந்தைகள் குறித்தும் ஏராளமான செய்திகள் கேரள ஊடகங்களில் ஏற்கனவே வந்திருந்தன. உடனடியாக இந்த செய்தியை கையில் எடுத்து ஊடகங்கள் 5 குழந்தைகளின் நலனுக்காக செய்தி வெளியிட உதவிகள் குவியத் தொடங்கின. 

கேரள அரசும், ரமாதேவிக்கு கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது, ஏராளமான நல்ல உள்ளங்கள் இந்த குழந்தைகளுக்கு உதவினர்.
காலங்கள் உருண்டோடின, தற்போது இந்த பெண் குழந்தைகளும் வளர்ந்து திருமணத்துக்கு தயாராகியுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஒரேநாளில் 4 பெண்களுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதில் உத்தரா என்ற பெண் பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா மயக்கவியல் துறையிலும்,உத்தாரா பத்திரிகையாளராகவும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்ற மணமகன்கள் பார்க்கப்பட்டு திருமணம் முடிவு செய்யட்டுள்ளது. இவர்களுடன் பிறந்த ஒரு சகோதரருக்கு மட்டும் இவர்களின் திருமணம் முடிந்தபின் நடைபெற உள்ளது.


5 குழந்தைகளின் தாய் ரமாதேவி கூறுகையில், “ என்னுடைய கணவர் திடீரென இறந்தவுடன் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிலை இருந்தது, போராடினேன். துணிச்சல் இருந்தால், நிச்சயம் நாம் வாழவழி கிடைக்கும்
நான் 5 குழந்தைகளுக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சமமான அளவில்தான் வழங்கி வளர்த்தேன். 

யாரையும் பிரித்து நடத்தவில்லை. அனைவருக்கும் ஒரேநாில் திருமணம் நடத்த வேண்டும் எனும் என்ற என்னுடைய கணவரின் கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். என் மகன் வாழ்க்கையில் இன்னும் உயரமான நிலையை அடைய இருக்கிறான் அவனுக்கு தாமதமாக திருமணம் நடக்கும்” எனத் தெரிவித்தார்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்