எங்களுக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ஏன் இப்படி எரியுது..?

Published : Oct 20, 2021, 01:48 PM IST
எங்களுக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ஏன் இப்படி எரியுது..?

சுருக்கம்

தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் 45 வயதானவரை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே மேகனாவின் கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மேகனா 2வதாகசிக்கதனேகுப்பே கிராமத்தை சேர்ந்த 45 வயதான சங்கரண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்படி, இரு வீட்டரின் அனுமதியுடன் மேகனா மற்றும் சங்கரண்ணாவிற்கு நேற்று (19-10-2021) சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது.

தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சிலர் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பிறந்த குழந்தையை 'எத்தனை' நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்? எந்த வயசுக்கு பின் போடக்கூடாது? முழுவிவரம்
Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?