ஒரு நாள் தங்கவே ரூ.4 லட்சம்.! இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ராயல் ஹோட்டல்கள் இவை தான்..

Published : Sep 20, 2023, 08:34 AM IST
ஒரு நாள் தங்கவே ரூ.4 லட்சம்.! இந்தியாவில் உள்ள மிகவும் விலையுயர்ந்த ராயல் ஹோட்டல்கள் இவை தான்..

சுருக்கம்

இந்தியாவில் உள்ள விலை உயர்ந்த ராயல் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தாஜ், ஹயாட் மற்றும் ஐடிசி மவுரியா போன்ற புகழ்பெற்ற ஃபைவ்ஸ்டார் ஹோட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்கு ஒரு நாள் அல்லது ஒரு இரவு தங்குவதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி நினைத்தால் அது தவறு. ஆம்.. உண்மை தான்.. நாட்டில் உள்ள இந்த புகழ்பெற்ற ஹோட்டல்களில் அனைவரும் தங்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கோடீஸ்வரர்கள் கூட இங்கே தங்குவதற்கு முன் தங்கள் விருப்பங்களை கவனமாக பரிசீலிப்பார்கள். இந்த பிரபலமான ஹோட்டல்கள் மட்டுமல்ல, இந்தியாவில் பல விலையுயர்ந்த ஹோட்டல்கள் உள்ளன, அங்கு ஒரு நாள் தங்குவதற்கான செலவு மிக மிக அதிகம். அந்த பணத்தில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு வீட்டை வாங்கிவிடலாம். அந்தளவுக்கு அதிக காஸ்ட்லியாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள விலை உயர்ந்த ராயல் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராம்பாக் அரண்மனை

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ராம்பாக் பேலஸ் ஹோட்டல், இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் முதன்மையானதாக உள்ளது. 47 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஹோட்டலில் செழுமையான தோட்டங்கள் மற்றும் கம்பீரமான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரச வாழ்க்கை அனுபவிக்க முடியும். உலக அளவில் சிறந்த ஹோட்டல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த ஆடம்பரமான ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான செலவு கணிசமாக மாறுபடும், இங்கு தங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.24,000 முதல் ரூ.400,000 வரை செலவாகும்.

வைஷ்ணவி தேவி கோவில் சுற்றிப் பார்க்க ஆசையா.. ஐஆர்சிடிசியின் ஆன்மிக சுற்றுலா.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

உமைத் பவன்

ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனை இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செழுமையான ஹோட்டல், கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆனது, 1943 இல் முடிக்கப்பட்டது மற்றும் 347 அறைகளைக் கொண்டுள்ளது. இந்த அரச நிறுவனத்தில் ஒரு இரவு தங்குவதற்கான செலவு ரூ.21,000 முதல் ரூ.400,000 வரை இருக்கும்.

ஓபராய் உதய் விலாஸ்

இந்தப் பட்டியலில் ராஜஸ்தானில் உள்ள ஓபராய் உதய்விலாஸ் ஹோட்டல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஹோட்டல், தனது பல வசதிகளுக்காகப் புகழ் பெற்றது. ஒரு பிரபலமான படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது. இங்கு ஒரு இரவு அறைக்கான செலவு பொதுவாக ரூ. 35,000 முதல் தொடங்குகிறது, ஆனால் ஒரு பேக்கெஜை முன்பதிவு செய்ய பல லட்சங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஓபராய் அமர்விலாஸ்

தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில் அமைந்திருக்கும் ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டல், அன்பின் சின்னமான தாஜ்மஹாலில் இருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஹோட்டலில் இருந்தே, தாஜ்மஹாலை பார்க்க முடியும். ஆனால் அதற்கு அதிகம் செலவாகும். இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான குறைந்தபட்ச விலை 25,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, அதிகபட்சம் 1.5 லட்சத்தை எட்டும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்