10th முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லை..கட்டணமும் இல்லை ! அரசின் அவசர தேவைக்கு 334 ஹெல்த் இன்ஸ்பெக்டர் போஸ்ட்

By ezhil mozhiFirst Published Apr 11, 2020, 4:58 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சேவையாற்றும் நபர்களுக்கான தேவை அதிகரித்து வந்துள்ளது. அவசரகால அடிப்படையில் தற்போது ஹெல்த் இன்ஸ்பெக்டர் போஸ்ட்க்குக்கு 334 பேர் எடுக்க உள்ளனர் 

10th முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லை..கட்டணமும்  இல்லை ! அரசின் அவசர தேவைக்கு 334 ஹெல்த்  இன்ஸ்பெக்டர் போஸ்ட் ரெடி !

அரசு வேலை கிடைக்காதா என பல அபிக்குகள் முயற்சி செய்தவர்கள் தற்போது அரசே கூப்பிட்டாலும் முன் வந்து தைரியமாக பணி செய்ய மனமில்லாமல் இருக்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் கொரோனா என்ற  ஒரே வைரஸ்  தான்...

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சேவையாற்றும் நபர்களுக்கான தேவை அதிகரித்து வந்துள்ளது. அவசரகால அடிப்படையில் தற்போது ஹெல்த் இன்ஸ்பெக்டர் போஸ்ட்க்குக்கு 334 பேர் எடுக்க உள்ளனர் 

அதன்படி வரும் 17-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி இது குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் (tamilnadu national rural health mission ) இணைய பக்கத்திற்கு சென்று  இது குறித்த முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி கல்வி தகுதியாக "பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்" என்றும், தமிழை ஒரு பாடமாக  படித்திருந்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர்த்து, அரசு அங்கீரம் பெற்ற கல்வி  நிறுவனத்தில் ஓராண்டு சுகாதார பணியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது  

பதவி : ஹெல்த் இன்ஸ்பெக்டர்

காலி இடங்கள் : 334 காலி இடங்கள்

மாத வருமானம் 20,000

வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மற்றும் தகுதியின் அடிப்படையில் சான்றிதழை சரி பார்த்து தேர்வு செய்யப்படும் இதற்கான தேர்வு கட்டணம் கிடையாது.

click me!