மாறு வேடத்தில் வந்த போலீசார்..! பொண்ணுங்க முன்னாடி சீன் போட்ட இளைஞர்களை அலேக்கா தூக்கிய சம்பவம்..!

Published : Jul 13, 2019, 12:40 PM IST
மாறு வேடத்தில் வந்த போலீசார்..! பொண்ணுங்க முன்னாடி சீன் போட்ட இளைஞர்களை அலேக்கா தூக்கிய சம்பவம்..!

சுருக்கம்

வயது பசங்க என்றால் அப்படிதான் இருப்பாங்கன்னு நம் வீட்டில் உள்ளவர்களே அவ்வப்போது பேசுவதை கேட்டு இருப்போம். அப்படிதான் இருப்பாங்க என்றால் எப்படி தெரியுமா..?

வயது பசங்க என்றால் அப்படிதான் இருப்பாங்கன்னு நம் வீட்டில் உள்ளவர்களே அவ்வப்போது பேசுவதை கேட்டு இருப்போம். அப்படிதான் இருப்பாங்க என்றால் எப்படி தெரியுமா..? பள்ளி கல்லூரி வாசலில் நின்றுகொண்டு, ரோட்டில் போகும் பெண்களை பார்ப்பதும் சைட் அடிப்பதுமாக இருப்பார்கள்.. இந்த காட்சி எல்லாம் படத்தில் நாம் பார்த்து இருப்போம்.. நிஜத்திலும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ளது அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. பள்ளி விடும் நேரத்தில், சில இளைஞர்கள் காத்திருந்து பெண்கள் வரும் சமயத்தில் தனது பைக்கை எடுத்து சாகசம் செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, மாறு வேடத்தில் விரைந்து வந்த போலீசார், இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்தை பார்த்து உள்ளனர் 

பின்னர் பைக்கில் வந்த 3 இளைஞர்களையும் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் தீயாய் பரவவே.. இந்த பள்ளியின் வெளியே இளைஞர்கள் நடமாட்டம் பார்ப்பதே கொஞ்சம் கஷ்டமாக உள்ளதாம். தேவையா இதெல்லாம் நமக்கு..? சிந்தியுங்கள்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்