அசால்ட்டா காற்றில் 4 பல்டி..! செம ஜிம்னாஸ்டிக்..! இந்திய குழந்தையின் திறமையை வெளிநாட்டினர் சொல்லி தெரிந்துகொள்ளும் அவலநிலை ..!

By ezhil mozhiFirst Published Aug 31, 2019, 7:28 PM IST
Highlights

ஒருவரின் திறமையை மக்கள் அறிய மிகவும் உதவியாக இருப்பது ஊடகமே... அப்படிப்பட்ட ஊடகத்தின் வாயிலாக அனைவரின் திறமையும் வெளிப்படுத்தி விட முடியுமா என்றால் அதற்கு பதில் பெரும் கேள்விக்குறியே... 

ஒருவரின் திறமையை மக்கள் அறிய மிகவும் உதவியாக இருப்பது ஊடகமே... அப்படிப்பட்ட ஊடகத்தின் வாயிலாக அனைவரின் திறமையும் வெளிப்படுத்தி விட முடியுமா என்றால் அதற்கு பதில் பெரும் கேள்விக்குறியே... ஏற்கனவே பிரபலமாக இருக்கக் கூடிய ஓர் நபர் எதை செய்தாலும் அதனை மீடியாக்கள் பிரபலப்படுத்தி விடும். ஆனால் மிகுந்த திறமை வாய்ந்த பலர் தன்னால் வெளி உலகத்திற்கு வர முடியவில்லையே... தன்னுடைய திறமையை இந்த உலகம் போற்ற வில்லையே... அதற்கான வாய்ப்பு தான் கிடைக்குமா? என்ற பல்வேறு ஏக்கத்துடன் இருப்பதையும் கண்கூடாக பார்க்க முடியும்.

ஆனால் என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கி பார்க்கும் நபரையும் பார்க்கமுடிகிறது. இதற்கிடையில் இன்று சமூக வலைத்தளம் அனைவருக்கும் கிடைத்த ஓர் வரப்பிரசாதம். பெரும்பாலானோர் வீணாக நேரத்தை சமூக வலைத்தளத்தில் கழிக்கின்றனர். அதே சமூக வலைதளம் மூலமாக பல்வேறு நபர் கோடிகணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்

 

What a pretty picture!
Future Gymnasts in making 🏅🎉

(video via social media) pic.twitter.com/2elqylGsgK

— M V Rao (@mvraoforindia)

இந்தநிலையில் எம் வி ராவ் என்ற அரசு அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 2 மாணவ செல்வங்கள் மிகவும் அற்புதமாக ஜிம்னாஸ்டிக் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோ கிளிப்பிங்கில்... என்ன ஒரு அழகு  வருங்காலத்தில் சாதனை  படைக்கப்போகும் ஜிம்னாஸ்டிஸ்ட் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 5 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நாடியா  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வழிவகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நல்ல ஓர் வாய்ப்பு அமைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இந்த வீடியோவை பார்க்கும்  அனைவருக்கும் இப்போதே எழுந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

click me!