12 ராசியினரில் யார் வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடைபெறும் தெரியுமா..?

Published : Dec 03, 2019, 01:35 PM ISTUpdated : Dec 03, 2019, 01:36 PM IST
12 ராசியினரில் யார் வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடைபெறும் தெரியுமா..?

சுருக்கம்

திறமைகள் வெளிப்படும். திடீர் பணவரவு உண்டு. தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுகிறான். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.  

12 ராசியினரில் யார் வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடைபெறும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். தொலைபேசி மூலம் ஒரு நல்ல தகவல் வந்து சேரும். உங்களுடைய கௌரவம் அந்தஸ்து உயரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

திறமைகள் வெளிப்படும். திடீர் பணவரவு உண்டு. தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுகிறான். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

குழப்பங்கள் அதிகரிக்கும். ஒரு சில வேலைகளை முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். உடல் நலம் சீராகும்.

கடக ராசி நேயர்களே..!

இறைவனை வழிபடுவீர்கள். குடும்ப பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை ஏற்படுத்தும். இருந்தாலும் சமாளிக்க தயங்காதீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய நாள். சீராக உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் சம்பந்தமாக சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுக்கு நன்மை கிடைக்க விரைவில் பல நன்மைகள் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு மனை வாங்க முற்படுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே....!

பூர்வீக சொத்துகளால் லாபம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவி செய்வார்கள் சுபகாரிய பேச்சு குறித்து முடிவு எடுப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மனதுக்கு பிடித்த சில சம்பவங்கள் நடைபெறும். மதிப்பும் மரியாதையும் உயரும். வரவு எதிர்பார்த்தபடி அமையும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்

தனுசு ராசி நேயர்களே....!

புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தனித்து இயங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்ப ராசி நேயர்களே...!

அமைதிக்காக ஆன்மீக தளத்தை நோக்கி செல்வீர்கள். நேற்றைய சேமிப்பு இன்று உங்களுக்கு உதவும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் அதிகரிக்கும். எப்படியும் நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். இடமாற்றம் செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கும். பல வாய்ப்புகள் உங்களை வந்தடையும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்