பெண்களே உஷார்...உணவு பழக்கத்தை சாதாரணமாக நினைக்காதீங்க

Published : Feb 22, 2025, 06:21 PM IST
பெண்களே உஷார்...உணவு பழக்கத்தை சாதாரணமாக நினைக்காதீங்க

சுருக்கம்

உணவு பழக்கவழக்கங்கள் பெண்களின் ஹார்மோன் சமநிலையை நேரடியாக பாதிக்கும் சக்தி கொண்டவை. ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு, மிதமான உடற்பயிற்சியைச் செய்தால், ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.  

பெண்களின் உடல் ஆரோக்கியத்திலும் மனநிலையிலும் ஹார்மோன்கள் (Hormones)பங்கு மிக முக்கியமானதாகும். உணவு பழக்க வழக்கங்களில் இந்த ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, கட்டுப்படுத்தும் திறன் அதிகம் உள்ளன. ஆனால் தவறான உணவுப் பழக்கங்கள், ஹார்மோன் சமநிலைக் கோளாறை ஏற்படுத்தி, மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பில் சிக்கல்கள், மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கலாம்.

உணவிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா? உணவுகள் பெண்களின் உடலில் எப்படிப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. இன்சுலின் அளவை உணவு கட்டுப்படுத்தும் :

இன்சுலின் என்பது இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும் முக்கிய ஹார்மோன். அதிக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) ஏற்படுத்தி, பிசிஓஎஸ் (PCOS - Polycystic Ovary Syndrome), நீரிழிவு (Diabetes) போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

சிறந்த உணவுகள் - கோதுமை, கற்றாழை ஜூஸ், தானியங்கள், பயறு வகைகள்
தவிர்க்க வேண்டியவை - வெள்ளை அரிசி, மைதா, இனிப்புகள், கருப்பட்டி அதிகம் உள்ள உணவுகள்

2. ஈஸ்ட்ரோஜன் (Estrogen) சமநிலை :

ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் முக்கிய ஹார்மோனாகும். கூடுதல் ஈஸ்ட்ரோஜன் எடை அதிகரிப்பு, ஹார்மோன் கோளாறுகள், முடி கொட்டுதல், மார்பக பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
சிறந்த உணவுகள்: தக்காளி, வெந்தயம், பச்சை இலைகள், முட்டை, கொத்தமல்லி
தவிர்க்க வேண்டியவை: அதிக பால் சார்ந்த உணவுகள் (dairy), சோயா பொருட்கள், ஹார்மோன் கலந்த இறைச்சி

3. புரோஜெஸ்டிரோன் (Progesterone) குறைபாடு :

புரோஜெஸ்டிரோன் குறைபாடு மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கருத்தரிக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும். ஸ்டிரெஸ், குறைந்த கொழுப்பு உணவுகள், குறைந்த ஊட்டச்சத்து உணவுகள் இந்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும். 

சிறந்த உணவுகள்: வேர்க்கடலை, நெல்லிக்காய், பாதாம், வாழைப்பழம்
தவிர்க்க வேண்டியவை: அதிக காஃபின் (காபி, தேநீர்), ஆல்கஹால், பாசிப்பயறு

4. டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவை :

பெண்களுக்கும் தசை வளர்ச்சி, வலிமை, செயல்திறன் போன்றவற்றில் டெஸ்டோஸ்டிரோன் உதவுகிறது. ஆனால் கூடுதல் அளவு இருந்தால், முகப்பரு, முடி கொட்டுதல், ஆண்மை தன்மைகள் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிறந்த உணவுகள்: தாளிக்காத கீரை, அவோகோடா, மீன், பருப்பு வகைகள்
தவிர்க்க வேண்டியவை: சீஸ்கள், ஐஸ்கிரீம், அதிக எண்ணெய் பொருட்கள்

5. கார்டிசோல் (Cortisol) - மனஅழுத்த ஹார்மோன் :

கார்டிசோல் அதிகமாக இருந்தால் மனஅழுத்தம், தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிறந்த உணவுகள்: கரும்புச் சாறு, துளசி, ஆப்பிள், கருஞ்சீரகம்
தவிர்க்க வேண்டியவை: அதிக உப்பு உணவுகள், அதிகமான பாஸ்ட் புட்கள், பானங்கள்

6. லெப்டின் (Leptin) மற்றும் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள் :

லெப்டின் என்பது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன். தவறான உணவுப் பழக்கங்கள், லெப்டின் எதிர்ப்பை ஏற்படுத்தி அதிக உணவு உண்பதை தூண்டும்.

சிறந்த உணவுகள்: வெள்ளரி, நார் உணவுகள் (மணிப்பூண்டு, கேரட்), முட்டை
தவிர்க்க வேண்டியவை: மொறுமொறுப்பான உணவுகள், ரஸ்க், கார்போனேற்றப்பட்ட பானங்கள்

7. தைராய்டு (Thyroid) ஹார்மோன் சமநிலை: 

பெண்களின் ஹார்மோன்களில் முக்கியமானது தைராய்டு. இது குறையும்போது சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிறந்த உணவுகள்: சுண்டைக்காய், சோயா இல்லாத புரத உணவுகள், கடல் உணவுகள்
தவிர்க்க வேண்டியவை: காளான், அதிக சோயா பொருட்கள், பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள்

8. ஓக்ஸிடோசின் (Oxytocin) - மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டும் உணவுகள் :

ஓக்ஸிடோசின் ஹார்மோன் மகிழ்ச்சியை அதிகரிக்கும், உறவுகளை உறுதிப்படுத்தும்.

சிறந்த உணவுகள்: நல்லெண்ணெய், கொத்துமல்லி, கொய்யா, பால்
தவிர்க்க வேண்டியவை: ஆல்கஹால், அதிக குளிர்ந்த பானங்கள்

9. மெலட்டோனின் (Melatonin) - தூக்கத்தை மேம்படுத்தும் உணவுகள் :

தூக்கக்குறைவால் ஹார்மோன் சமநிலைக்கோளாறு ஏற்படும். மெலட்டோனின் தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும்.

சிறந்த உணவுகள்: தயிர், வாழைப்பழம், தேன்
தவிர்க்க வேண்டியவை: அதிக மிளகாய், மது, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்

10. இன்ஸுலின் எதிர்ப்பை தவிர்க்க உணவில் எடுக்க வேண்டியவை

இன்ஸுலின் எதிர்ப்பு PCOS, நீரிழிவு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

சிறந்த உணவுகள்: சாமை, கேழ்வரகு, கறுப்பு நிலக்கடலை
தவிர்க்க வேண்டியவை: வெள்ளை உணவுகள் (மாவு, அரிசி, சர்க்கரை)

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க