40 நொடிக்கு ஒருவர் தற்கொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்..! முக்கிய இடத்தில் சென்னை..!

By ezhil mozhiFirst Published Sep 11, 2019, 5:28 PM IST
Highlights

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

40 நொடிக்கு ஒருவர் தற்கொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்..! முக்கிய இடத்தில் சென்னை..! 

இந்தியாவில் 40 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது சென்னை மாநகரம்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அதில் இலக்கிய போட்டி பேச்சுப்போட்டி விவாதம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்காக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய மருத்துவமனை இயக்குனர் சந்திரிகா, 'இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன அதற்கெல்லாம் காரணம்.. சரியான புரிதலும் இந்த சமுதாயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாததே. கல்லூரி மாணவர்கள் கூட என்னதான் படித்தாலும் ஒரு சிறிய தோல்வி கூட தாங்க முடியாத மனநிலையில் இருக்கின்றனர் என்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.

ஒரு சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் அதற்கெல்லாம் தீர்வு தற்கொலைதான் என்ற மனநிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் இருப்பதை கண்டு மனம் வேதனை அளிக்கிறது. இவ்வாறு தற்கொலை செய்வதில் இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அதில் மிக முக்கியமாக சென்னை இரண்டாவது இடத்தைப் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சனை தீரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவரை சுற்றி குறைந்தபட்ச 135 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. இதை ஓர் ஆய்வறிக்கை நமக்கு தெரிவிக்கின்றது. எனவே பள்ளி கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவமனை முடிவு செய்து அதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

click me!