இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 3 ஆண்டுகள் ஆகும்... சீரம் நிறுவனம் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published May 19, 2021, 10:48 AM IST
Highlights

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிட்டு வரும் சூழலில், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழலில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது ஏன் என்ற சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து கோவிட் ஷில்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தொற்று குறைவாக இருந்தபோதுதான் தடுப்பூசி ஏற்றுமதி செய்து வந்ததாகவும், தற்போது இந்தியாவிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் மூன்று மாதங்களுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சுமார் 3 ஆண்டுகள் தேவைப்படும் என சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

click me!