ஃபின்ச், ஏபிடி, படிக்கல் அரைசதம்; மீண்டும் கோலி காலி..! டெத் ஓவரில் தெறிக்கவிட்ட துபே. மும்பைக்கு கடின இலக்கு

Published : Sep 28, 2020, 09:26 PM IST
ஃபின்ச், ஏபிடி, படிக்கல் அரைசதம்; மீண்டும் கோலி காலி..! டெத் ஓவரில் தெறிக்கவிட்ட துபே.  மும்பைக்கு கடின இலக்கு

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே ஃபின்ச் அதிரடியாக ஆட, மறுமுனையில் படிக்கல் நிதானமாக ஆடினார். அதிரடியாக ஆடிய ஃபின்ச், அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, சரியான தொடக்கம் கிடைக்காமல் திணறினார். எந்த ஷாட்டுமே அவருக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை. 11 பந்தில் வெறும் 3 ரன்களுக்கு நடையை கட்டினார் கோலி. அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ஆடி 30 பந்தில் கிட்டத்தட்ட அதே அளவிற்கான ரன்கள் அடித்திருந்த படிக்கல், பதினைந்து ஓவருக்கு மேல் அடித்து ஆட தொடங்கினார். அதிரடியாக ஆடி ஒருசில சிக்ஸர்களை பறக்கவிட்ட படிக்கல், அரைசதம் அடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பும்ரா வீசிய 17வது ஓவர் மற்றும் 19வது ஓவரில் டிவில்லியர்ஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷிவம் துபேவும் சிக்ஸர்களை விளாசினார். பாட்டின்சன் வீசிய கடைசி ஓவரில் துபே 3 சிக்ஸர்களை விளாச, 20 ஓவரில் ஆர்சிபி அணி 201 ரன்களை அடித்து 202 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

டிவில்லியர்ஸ் 24 பந்தில் தலா 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 55 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். துபே 10 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Abhishek Sharma: நல்ல ரெக்கார்டை பிரேக் பண்ணுவாருனு பார்த்தா, இப்படி ஒரு மோசமான ரெக்கார்டையா?
CSK vs PBKS: 200 ரன் அடிச்சும் CSK தோத்துப்போனது ஏன்? 5 காரணங்கள்!