மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்
மொத்தம் 40 தொகுதிகளை மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைக்கவுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது. சோரம்தங்கா மாநில முதல்வராக இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
undefined
இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்க அரசு வருகிற 8ஆம் தேதி (நாளை மறுநாள்) பதவியேற்கவுள்ளது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் லால்துஹோமா பதவியேற்கவுள்ளார். அம்மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டியை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரவுள்ளார்.
தேர்தல் முடிவுகளின்படி, முதல் முறையாக மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் அல்லாத அரசு பதவியேற்கவுள்ளது. முன்னதாக, கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பான வால் உபா கவுன்சிலின் கூட்டம் நேற்று மாலை தலைநகர் ஐஸ்வாலில் நடைபெற்றது. அதில் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டு வெள்ளப் பாதிப்பு: ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
தற்போதுள்ள அரசியல் அமைப்பால் மாநில இளைஞர்கள் சோர்வடைந்துள்ளதாகவும், புதிய தலைமைத்துவம் மற்றும் புதிய கொள்கைகள் கொண்ட புதிய அமைப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் லால்துஹோமா தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மிசோ தேசிய முன்னணியின் தோல்விக்கு முழுப்பெறுப்பேற்பதாக தெரிவித்த முன்னாள் முதல்வர் சோரம்தங்கா, தேர்தலில் பெண்களின் முழு ஆதரவு தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.