100 சதவீத சைவ உணவு டெலிவரி பிளான்.. சோமேட்டோவை வறுத்து எடுத்த நெட்டிசன்கள்.. பின்வாங்கிய Zomato..

By Raghupati R  |  First Published Mar 20, 2024, 10:51 AM IST

100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்த சோமேட்டோ, தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக சோமேட்டோ இருந்து வருகிறது. நேற்று சோமேட்டோ நிறுவனம் சைவ உணவைச் சாப்பிடுவோருக்கு புதியதாக 'Pure Veg Mode' என்ற ஒரு வகை டெலிவரி முறையை அறிமுகம் செய்தது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ 100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற முக்கியமான கருத்து என்னவென்றால், தங்கள் உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது, எப்படிக் கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சோமேட்டோ நிறுவனம் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

இந்த ப்யூர் வெஜ் மோடில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும். அசைவ உணவுகளை வழங்கும் எந்தவொரு உணவகமும் இதில் இருக்காது. எங்களின் பிரத்தியேக ப்யூர் வெஜ் ஆப்ஷனில் இந்த ப்யூர் வெஜ் உணவகங்களிலிருந்து பெறப்படும் ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் ப்யூர் வெஜ் பச்சை டெலிவரி பையில் செல்லாது.

இந்த ப்யூர் வெஜ் மோட் அல்லது ப்யூர் வெஜ் ஆப்ஷன் என்பது எந்தவொரு மத, அல்லது அரசியல் சார்பில் இல்லை. இது எந்தவொரு மதத்தையும் அந்நியப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் அதிகரித்த நிலையில் சோமேட்டோ நிறுவனம் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது.

Update on our pure veg fleet —

While we are going to continue to have a fleet for vegetarians, we have decided to remove the on-ground segregation of this fleet on the ground using the colour green. All our riders — both our regular fleet, and our fleet for vegetarians, will…

— Deepinder Goyal (@deepigoyal)

இதுகுறித்து சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சைவ உணவு உண்பவர்களுக்கான சிறப்பு வசதியை அகற்ற முடிவு செய்துள்ளோம். எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பார்ட்னர்கள் அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த வெளியீட்டின் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்குப் புரிய வைத்தீர்கள். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சீக்கிரமா ஆபிஸ் போக இருபாலருக்கும் ஏற்ற டூ வீலர் .. பெட்ரோல் அதிகம் குடிக்காத 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்..

click me!