அந்த மனசு தான் சார் கடவுள்! தனது பாதி சொத்துக்களை நன்கொடையாக வழங்கும் இளம் தொழிலதிபர் நிகில் காமத்..

Published : Jun 06, 2023, 06:19 PM IST
அந்த மனசு தான் சார் கடவுள்! தனது பாதி சொத்துக்களை நன்கொடையாக வழங்கும் இளம் தொழிலதிபர் நிகில் காமத்..

சுருக்கம்

நிகில் காமத் சுமார் 20 ஆண்டுகளாக பங்குச்சந்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Zerodha நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத், தனது நகைச்சுவையான Linkedin பதிவுகள் மூலம் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு உன்னதமான காரணத்திற்காக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். நிகில் காமத் சமீபத்தில் The Giving Pledge என்ற அமைப்பில் சேர்ந்துள்ளார். பெரும் பணம், சொத்துக்கள் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் வாழ்நாளில் அல்லது தங்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் செல்வத்தில் பாதியையாவது தொண்டு செய்யும் காரணங்களுக்காக கொடுக்க உறுதியளிக்கும் ஒரு பிரச்சார அமைப்பு தான் The Giving Pledge.

இந்த அமைப்பு வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரால் 2010 இல் நிறுவப்பட்டது. அசிம் பிரேம்ஜி, கிரண் மஜும்தார்-ஷா மற்றும் ரோகினி மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோரைத் தொடர்ந்து இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிய 4-வது இந்தியர் நிகில் காமத் ஆவார்.

இதுகுறித்து நிகில் காமத் வெளியிட்டுள்ள அறிக்கையில் The Giving Pledge அமைப்பில் இணைந்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பையும் குறிப்பிட்டார். வயதில் இளம் நபராக இருந்தபோதிலும், தனது சொந்த மதிப்புகள் மற்றும் கனவுகளுடன் இணைந்த ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்தை நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் “ உலகை நேர்மறையாக மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன், மேலும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் அறக்கட்டளையின் நோக்கம் எனது மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளுடன் ஒத்துப்போகிறது என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

நிகில் காமத் சுமார் 20 ஆண்டுகளாக பங்குச்சந்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் 17 வயதில் முழுநேர வேலை செய்யத் தொடங்கியதுடன், முதலீட்டில் நிபுணத்துவம் பெற்றார், பொது மற்றும் தனியார் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்வதில் கணிசமான நேரத்தை செலவிடுகிறார். மேலும், தனியார் முதலீடுகளுக்கான தளமான Gruhas, இந்தியாவில் உள்ள அதி உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (HNIs) செல்வத்தை நிர்வகிக்கும் ஹெட்ஜ் ஃபண்ட் True Beacon, fintech இன்குபேட்டர் ரெயின்மேட்டர் போன்ற பிற முயற்சிகளையும் அவர் நிறுவியுள்ளார்.

சமீபத்தில் தனது 13வது ஆண்டை கொண்டாடிய The Giving Pledge சமூகத்தில் காமத் அன்புடன் வரவேற்கப்பட்டார். நிகழ்வின் போது, பங்கேற்பாளர்கள் தங்களின் தொண்டு முயற்சிகளின் செயல்திறனையும் தாக்கத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த யோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமைப்பில் தற்போது 29 நாடுகளைச் சேர்ந்த 241 நன்கொடையாளர்கள் உள்ளனர்.

நிகில் காமத்தை தவிர, ராவெனல் பி. கரி III (அமெரிக்கா), பெனாய்ட் டேஜ்வில்லே மற்றும் மேரி-புளோரன்ஸ் டேஜ்வில்லே (பிரான்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ்), மைக்கேல் க்ராஸ்னி (அமெரிக்கா), டாம் மற்றும் தெரசா உட்பட பலர் சமீபத்தில் The Giving Pledge அமைப்பில் சேர்ந்துள்ளனர். உலகில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ள பல்வேறு பின்னணியில் உள்ள நன்கொடையாளர்களை ஈர்க்கவும் இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!