குண்டும் குழியுமான சாலை… நூதன முறையில் இளைஞர் போராட்டம்… வைரலாகும் வீடியோ!!

By Narendran SFirst Published Aug 9, 2022, 4:51 PM IST
Highlights

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சாலையின் மோசமான நிலையைக் கண்டித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சாலையின் மோசமான நிலையைக் கண்டித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களின் இந்த போராட்டம் இணையத்தில் வைரலானதுடன் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரளாவின் மலப்புரம் பகுதி சாலை மோசமான நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து பல போராட்டங்களை நடத்தியும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: பிரதமர் மீது இவ்வளவு பக்தியா.. ஆந்திரா TO டெல்லிக்கு யாத்திரை.. 2000 கி.மீ நடந்தே செல்லும் மோடி பக்தர்.

இந்த நிலையில் பாண்டிக்காட்டைச் சேர்ந்த ஹம்சா போரலி மற்றும் அசார் முகமது ஆகிய இரண்டு இளைஞர்களும் ஒரு வாளி, குவளை, சோப்பு மற்றும் குளியல் துண்டுடன் சென்று பாண்டிக்காட்டையும் பாலக்காட்டையும் இணைக்கும் சாலையில் உள்ள ஆழமான பள்ளங்களில் ஒன்றை இருவரும் தேர்வு செய்தனர். அதில் இருவரும் சோப்புபோட்டு குளித்ததோடு யோகாகளையும் செய்தனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி-யின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரிப்பு: நிலத்தை தானமாக வழங்கிவிட்டார்

இதுக்குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அங்கு மஞ்சேரி தொகுதி எம்எல்ஏ யு.ஏ.லத்தீப் முன் ஹம்சா வெவ்வேறு யோகா போஸ்களை செய்து காட்டினார். இதுக்குறித்து எம்.எல்.ஏ கூறுகையில், சாலைகளின் மோசமான நிலை குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் இந்த நூதன போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. 

click me!