பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை, அசையும் சொத்துக்கள் மட்டுமே அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன.
காந்திநகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக அளித்துவிட்டார். இதனால் மோடியிடம் அசையா சொத்துகள் ஏதும் இல்லை.
கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் ரூ.ஒரு கோடியே 97லட்சத்து 68ஆயிரத்து 885 மதிப்புள்ள சொத்து இருந்தது. 2022ம் ஆண்டில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2 கோடியே 23 லட்சத்து 83ஆயிரத்து 504ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் சொத்துப்பட்டியலில் 2002ம் ஆண்டு காந்திநகரில் ஒரு குடியுருப்புமனை வாங்கியதாகத் தெரிவித்திருந்தார். அந்த இடத்தின் மதிப்பு சந்தை மதிப்பில் ரூ.1.04 கோடியாக இருந்தது. அந்த இடத்தை பிரதமர் மோடி தானமாக வழங்கியுள்ளார்.
பீகாரில் நிதிஷ் பாஜக கூட்டணி உடைந்தது:ஆர்ஜேடியுடன் கூட்டு? தேஜஸ்வி துணை முதல்வர்
பிரதமர் மோடியிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.35,250 இருக்கிறது. இது கடந்த ஆண்டு ரூ.36,900 ஆக இருந்தது. பிரதமர் மோடியின் வங்கி இருப்பும் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு மார்ச் 31ன்படி ரூ.ஒரு லட்சத்து 52,480 இருந்தது, இப்போது, ரூ.46ஆயிரத்து 555 ஆகஇருக்கிறது.
பிரதமர் மோடியிடம் 4 தங்க மோதிரங்கள் மட்டும் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 1.73 லட்சமாகும். தேசிய சேமிப்புப்பத்திரங்கள் ரூ.9.05 லட்சம், காப்பீடு பத்திரங்கள் ரூ.1.89 லட்சம் மதிப்பில் உள்ளன.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரூ.2.54 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.2.97 கோடிக்கு அசையா சொத்துக்களும் உள்ளன.
மத்திய அமைச்சரவையில் உள்ள 29அமைச்சர்களும் தங்கள் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.1.62 கோடியாக இருந்தநிலையில் இப்போது ரூ.1.83 கோடியாக அதிகரித்துள்ளது.
பீகாரில் பாஜக-நிதிஷ் கூட்டணி உடையுமா? ஆர்ஜேடி-ஜேடியு ஆட்சியா?எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது
மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாயா சொத்துமதிப்பு கடந்தஆண்ட விட ரூ.1.42 கோடி மதிப்பு அதிகரித்து, ரூ.7.29 கோடியாக உயர்ந்துள்ளது. விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா சொத்து மதிப்பு ரூ.35,63 கோடியாகும், ரூ.58 லட்சத்துக்கு கடன் உள்ளது. கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டிதன்னிடம் ரூ.1.43 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.