bihar: nitish: பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா: ஆட்சியை இழந்தது பாஜக

Published : Aug 09, 2022, 04:26 PM ISTUpdated : Aug 09, 2022, 04:28 PM IST
bihar: nitish: பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா: ஆட்சியை இழந்தது பாஜக

சுருக்கம்

பீகார் முதல்வர் பதவியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் விலகுவதாக அறிவித்து, ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

பீகார் முதல்வர் பதவியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் விலகுவதாக அறிவித்து, ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறிவிட்டதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகாரில் 2020ம் ஆண்டு தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணிவெற்றிபெற்று, நிதிஷ் குமார் முதல்வராகினார்.  

பிரதமர் மோடி-யின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரிப்பு: நிலத்தை தானமாக வழங்கிவிட்டார்

 ஆனால், கடந்த சில மாதங்களாக பாஜகவு தலைவர்களுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருக்கும் மூத்த தலைவர் ஆர்சிபி சிங்கை வைத்து கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியால் நிதிஷ் குமார் உச்சகட்ட கோபமடைந்துவிட்டார். இதனால் பாஜகவுடனான நட்பை முறித்துக்கொள்ளவும் தயாரிகினார். 

பீகாரில் நிதிஷ் பாஜக கூட்டணி உடைந்தது:ஆர்ஜேடியுடன் கூட்டு? தேஜஸ்வி துணை முதல்வர்

இது தொடர்பாக முடிவு எடுக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என முடிவு எடுத்தனர். 
இதையடுத்து, ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளார்.

மாலை ஆளுநரைச் சந்தித்த முதல்வர் நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதன்பின் வெளியே நிருபர்களுக்குப் பேட்டியளித்த நிதிஷ் குமார் “ முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதனால் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிஹாரில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. 

பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க உள்ளன. 

பீகார் அரசியல்: ஆட்சி மாற்றம் வருமா? அரசியல் கணக்கு என்ன? ஆர்ஜேடி- நிதிஷ் கூட்டணி அமையுமா?

அவ்வாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தால், நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிட்ஸ் கட்சிகள் பலம் 160ஆகஅதிகரி்க்கும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவருவதற்கு பாஜக முயன்றால் தகுந்த  பதிலடி கொடுக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!