சிலப்பதிகாரம் படிங்க.. கண்ணகி கோபத்தால் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா.? திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம் !!

By Raghupati R  |  First Published Aug 9, 2023, 9:20 PM IST

சோழர் மரபு என்று சொல்லி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பெரும் ஆடம்பரத்துடன் செங்கோல் வைத்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாக தெரியாது. பாண்டியன் செங்கோலை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “இந்த சுதந்திரம் நம் மீது பெரும் பொறுப்புகளை எறிந்துவிட்டு சென்றுள்ளது. ஏதேனும் தவறு நேர்ந்தால் இதற்கு பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் காரணமாகமாட்டார்கள் என்ற டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் கருத்துடன் இந்த பேச்சை தொடங்குகிறேன். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்திய கூட்டணி சார்பிலும் நான் சார்ந்துள்ள திமுக சார்பிலும் ஆதரிக்கிறேன். 

Tap to resize

Latest Videos

இந்த அரசு மணிப்பூரில் இரட்டை இஞ்சின் ஆட்சி நடந்து வருவதாக பெருமையுடன் கூறுகிறது. ஆனால் இந்த இரட்டை இஞ்சின் அரசு அம்மாநில மக்களுக்கு எதிரான இரட்டை ஆயுதமாக மாறி உள்ளது. இரட்டை பேரழிவாகவும் இரட்டை பிளவாகவும் மணிப்பூர் மாறி உள்ளது. தனது வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் அரிதாக பிரதமர் மோடி ஊடகங்களை சந்தித்தார். 

ஆனால் நாடாளுமன்றத்திற்குள் வந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச மறந்துவிட்டார். மணிப்பூரில் 170 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கோனோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

மணிப்பூரில் நடக்கும் வன்முறையை இந்த இரட்டை இஞ்சின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சோழர் மரபு என்று சொல்லி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பெரும் ஆடம்பரத்துடன் செங்கோல் வைத்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாக தெரியாது. பாண்டியன் செங்கோலை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், சாமானியர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதால் பாண்டியனின் செங்கோல் எரிந்த கண்ணகி குறித்த கதை உங்களுக்கு தெரியுமா? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று கனிமொழி பேசினார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!