மணிப்பூரில் நடந்தது வெட்கக்கேடு.. அதை அரசியல் செய்வது அதைவிட வெட்கக்கேடு - அமித்ஷா ஆவேசம் !!

By Raghupati R  |  First Published Aug 9, 2023, 8:15 PM IST

மணிப்பூரில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வெட்கக்கேடான அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை குற்றம்சாட்டினார்.


"மணிப்பூரில் நடந்தது வெட்கக்கேடானது, ஆனால் அதை வைத்து அரசியல் செய்வது அதைவிட வெட்கக் கேடானது" என்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் அமித்ஷா கூறினார்.அவர் கூறினார்.  மணிப்பூர் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருந்தது. இந்த தீர்மானத்தின் மீது இன்று காங்கிரஸ் கட்சி சாபில் எம்பி ராகுல் காந்தி பேசினார்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பேசினார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் பேசும்போது, "மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த சம்பவங்களால் நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற சம்பவங்களை யாரும் ஆதரிக்க முடியாது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

Latest Videos

undefined

மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், மணிப்பூர் சம்பவம் குறித்து இரவு 2.30 மணிக்கும், மீண்டும் காலை 6 மணிக்கும் என்னிடம் பிரதமர் பேசினார். மாநில அரசு மத்திய அரசுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைத்தது. சரியாக செயல்படாமல் இருந்த அதிகாரிகளை மாற்றப்பட்டுள்ளனர்.  ஏன் வீடியோவை போலீஸ் டிஜிபி மற்றும் போலீஸ் ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கவில்லை. ஏன் இந்த சம்பவம போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து மறைக்கப்பட்டது?

எப்போது வீடியோ வெளியிடப்பட்டதோ அப்போது உடனடியாக நாங்கள் செயல்பட்டோம். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தோம்.  வான்வழியாக செல்ல வேண்டும் என்று கூறப்பட்டு இருந்ததை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. சாலை மார்க்கமாக செல்வதாக தெரிவித்தனர் என்று அமித்ஷா கூறினார்.

மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்று இருந்தார். அப்போது இம்பாலுக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ராகுல் காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், காங்கிரஸ், பாஜக இடையே விவாதம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபா, லோக் சபா இரண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்குகின்றன.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!