உங்ககிட்ட ஆதார், பாஸ்போர்ட் இருக்கா? என்பிஆரில் தகவல்களை தெரிவிப்பது கட்டாயம்..

By Asianet TamilFirst Published Jan 17, 2020, 4:24 PM IST
Highlights

உங்ககிட்ட ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை இருந்தால், தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிக்காக வரும் அதிகாரியிடம் கட்டயாம் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 

உங்ககிட்ட ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை இருந்தால், தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிக்காக வரும் அதிகாரியிடம் கட்டயாம் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நாட்டில் வழக்கமாக குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். கடந்த மாதம் 24ம் தேதி சென்செக்ஸ் 2021 மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 பணிகளுக்காக ரூ.8,300 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிக்காக வரும் பணியாளர்களிடம் ஆதார் குறித்த தகவல்களை விருப்பப்பட்டால் தெரிவிக்கலாம் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். அதேசமயம், சுய சான்றிதழ் அல்லது சுய அறிவிப்பை உள்ளிடக்கியது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அதேவேளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து கூறுகையில், தன்னார்வ என்பது சில தகவல்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை என தெரிவித்தார்.

இதனால் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியின், ஆதார் உள்ளிட்ட தகவல்களை தெரிவிப்பது கட்டாயமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் சந்தேகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்டவை ஒருவரிடம் இருந்தால் அது குறித்து தகவல்களை தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியின் போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆதார் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்றால் முதல் கட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு பணியின் போது தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

click me!