அமேசான் நிறுவனர் அறிவிப்பால் எந்த பலனும் இந்தியாவுக்கு இல்லை: மத்திய அமைச்சர் விளாசல்!

By Asianet TamilFirst Published Jan 17, 2020, 4:18 PM IST
Highlights

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் ரூ.7,100 கோடி முதலீடு செய்ய போவதாக கூறியிருப்பது அந்நிறுவனத்தின் இழப்பை சரிசெய்யவே நிதியாக அளிக்கிறார். இதனால் இந்தியாவுக்கு பெரிய சாதகம் கிடையாது என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
 

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் ரூ.7,100 கோடி முதலீடு செய்ய போவதாக கூறியிருப்பது அந்நிறுவனத்தின் இழப்பை சரிசெய்யவே நிதியாக அளிக்கிறார். இதனால் இந்தியாவுக்கு பெரிய சாதகம் கிடையாது என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெப் பிசோஸ் 3 நாள் பயணமாக கடந்த புதன்கிழமையன்று இந்தியாவுக்கு வந்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெப் பிசோஸ் பேசுகையில், இந்தியாவில் சிறு, குறு வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்க அமேசான் ரூ.7,100 கோடி முதலீடு செய்யும் என்றும் என தெரிவித்தார்.

ஜெப் பியோஸ் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்ய இருப்பதால் அது நம் நாட்டுக்கு சாதகமான அம்சமாக என பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. அமேசான் நிறுவனம் முதலீடு இந்தியாவுக்கு சாதகமானது இல்லை. அந்நிறுவனம் தனது நஷ்டத்தை சரிசெய்யவே இங்கு பணம் போடுகிறது என உண்மையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் போட்டு உடைத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், சட்டத்தின் சொற்கள் மற்றும் நோக்கத்தை தயவுசெய்து பின்பற்றுங்கள் என பல சந்தர்ப்பங்களில் மக்களிடம் கூறி இருக்கிறேன். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் (அமேசான்) ரூ.7,100 கோடி முதலீடு செய்து இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.7,100 கோடி இழப்பை சந்தித்தால் அப்புறம் ரூ.7,100 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும். அவர்கள் ரூ.7,100 கோடி முதலீடு செய்யும் போது அது இந்தியாவுக்கு பெரிய உதவியாக இல்லாத போது அது முதலீடு அல்ல என தெரிவித்தார்.

click me!