
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக வெற்றி பெற்ற அமைக்க இருக்கும் நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
ஆலோசனை
இந்த சந்திப்பின்போது, புதிய அமைச்சரவை குறித்தும், யாரெல்லாம் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது குறித்தும் பாஜக மூத்த தலைவர்களுடன் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தஉள்ளார்.
பிரதமர் மோடியுடன் நடத்தப்படும் ஆலோசனையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். இந்த ஆலோசனையின்போது உ.பி.யில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும்தேதியும் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது
துணை முதல்வர்கள்
முதல்வர் யோகியுடன், மாநில பாஜக தலைவர் ரத்தன் தேவ் சிங், அமைச்சர் சுனில் பன்சால், மாநிலப் பொறுப்பாளர் ராதா மோகன் சிங் ஆகியோரும் டெல்லி செல்கிறார்கள்.
உ.பி.யில் புதிதாக அமையும் அமைச்சரவையில், துணை முதல்வர்கள்,அமைச்சர்கள் குறித்த பட்டியலை பாஜக தயாரித்துள்ளது. அமைச்சர்களின் கல்வித்தகுதி, சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில்அனைத்துப் பிரிவினருக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.இந்தப் பட்டியல் குறித்த இறுதிமுடிவை பாஜக மேலிடம் எடுக்கும். துணை முதல்வர்கள் பதவிக்கு சுவதந்திர தேவ் சிங், பேபி ராணி மவுரியா, பிரிஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
யாருக்கு வாய்ப்பு
இதில், போக்குவரத்து துறை அமைச்சராக ஸ்வதந்திர தேவ் சிங் இருந்து வருகிறார், மாநில பாஜக தலைவராகவும் இருந்தவர்.
கேசவ் பிரசாத் மவுரியா தேர்தலில்தோல்வி அடைந்தாலும், நிர்வாகத்தில் சிறந்தவர் என்பதால், அவருக்கு எம்எல்சி முறையில் துணை முதல்வர் பதவி மீண்டும் வழங்கப்படலாம்.
பேபி ராணி மவுரியா தற்போது உத்தரகாண்ட் ஆளுநராக இருந்து வருகிறார், ஜாதவ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் என்பதால், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம்.
பிராமண சமூகம்
பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் பதக் சட்டத்துறை அமைச்சராக இருந்தார், அவருக்கும் துணை முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம். பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், குருமி சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், பாஜக மிகப்பெரிய வெற்றி பெறமுக்கியமானவர் என்பதால் இவரின் பெயரும்பரிசீலிக்கப்படுகிறது
லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் வென்று சட்டத்துறை அமைச்சராக இருந்த பிரிஜேஷ் பதக், பிராமணசமூகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவருக்கு துணைபதவி உறுதி எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
இதுதவிர முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகளான ராஜேஷ்வர் சிங், ஆசிம் அருண் ஆகியோரும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. லக்னோவில் உள்ள சரோனிஜினி நகரிலிருந்து தேரந்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வர் சிங் உ.பி முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி. கண்ணூஜ் தொகுதியில் இருந்து தேரந்தெடுக்கப்பட்டவர் ஆசிம் அருண். இவர் முன்னாள் ஏடிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்நாத் சிங் மகன்
ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார் அவருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம். பிராமண சமூகத்தின் இளம் தலைவர் சலாபா மணி திரிபாதி அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்புள்ளது. கூட்டணிக் கட்சியான அப்னா தளம் மற்றும் நிசாத் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது