
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அருகே உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் 36 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன்களை தள்ளுபல செய்தார்.
வாரம் ஒரு நாள் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் தானே நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். இப்படி தொடர்ந்து அதிரடி காட்டி வரும் யோகியின் அடுத்த அதிரடி என்ன தெரியுமா?
மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் அருகில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். யோகியின் இந்த உத்தரவிற்கு பொது மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.