இனி லட்சக்கணக்கில் ரொக்கமாக பரிமாற்றம் செய்யலாம் - வருமானவரித்துறை அளித்த ‘இன்ப அதிர்ச்சி’

 
Published : Apr 05, 2017, 10:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
இனி லட்சக்கணக்கில் ரொக்கமாக பரிமாற்றம் செய்யலாம் - வருமானவரித்துறை அளித்த ‘இன்ப அதிர்ச்சி’

சுருக்கம்

No longer can transfer millions in cash - Revenues surprise

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்ய ஏப்ரல்1-ந்தேதிமுதல் மத்திய அரசு தடைவிதித்து இருந்த நிலையில், அந்த தடையை நேற்று தளர்த்தியுள்ளது.

அதாவது, வங்கிகள், தபால்நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் ரொக்கமாக ரூ. 2லட்சத்துக்கு மேல் பரிமாற்றம் செய்யவும், பணம் எடுக்கவும் தடையில்லை என்று மத்திய அரசு புதிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, நடப்பு 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில், ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பரிமாற்றம் செய்யத் தடை செய்து அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடரில் அருண் ஜெட்லி கொண்டு வந்த நிதி மசோதாவில், திருத்தம் கொண்டு வந்தார். அதில், ரூ. 3 லட்சத்துக்கு மேல் என்பதை திருத்தி, ரூ. 2 லட்சத் மேல் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்ய தடை கொண்டு வந்தார். அந்த தடை கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிதாக 269எஸ்.டி. என்ற ஒரு பிரிவை இணைத்துள்ளது. அதில், வங்கிகள், தபால்நிலையங்கள், மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுக்கவோ அல்லது பணம் போடவோ தடையில்லை. மத்திய அரசு விதித்துள்ள தடை இந்த இந்த 3 விஷயங்களுக்கும் பொருந்தாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!