நடிகர் சல்மான் கான் போதை மருந்து சாப்பிடுபவர், ஷாருக் கான் மகன் போதை மருந்து கடத்தி சிக்கியவர் என்று யோகா குரு பாபா ராம் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
நடிகர் சல்மான் கான் போதை மருந்து சாப்பிடுபவர், ஷாருக் கான் மகன் போதை மருந்து கடத்தி சிக்கியவர் என்று யோகா குரு பாபா ராம் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களையும், கொரோனா தடுப்பூசியையும் அவதூறாகப் பேசி, நம்பிக்கையற்ற வகையில் பேசி யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சையில் சிக்கினார்.
ஒரு தேசம் ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி உதவிதொகை
இது தொடர்பாக பல முறை ராம்தேவுக்கும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் இடையே அறிக்கை போர் நடந்தது. பல முறை பாபா ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்தும் அவர் அடங்கவில்லை. இது தொடர்பாக அகிலஇந்திய மருத்துவக் கவுன்சில் பாபா ராம்தேவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது நடந்து வருகிறது
இந்நிலையில் அடுத்த சர்ச்சைக்கு பாபா ராம் தேவ் வாயைத் திறந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் யோகா குரு பாபா ராம் தேவ் பங்கேற்றார்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் ஊழல்! சுப்பிரமணியன் சுவாமி மனுவை ஏற்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அப்போது அவர் பேசியது சர்சையாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அவர் பேசுகையில் “ திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் அதிக அளவு போதை மருந்து பயன்படுத்துகிறார்கள். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து பார்ட்டியில் போதை மருந்துடன் பிடிபட்டு சிறை சென்றார்.
நடிகர் சல்மான் கான் போதை மருந்து பயன்படுத்துபவர், அமீர் கான் பற்றி எனக்குத் தெரியாது இந்த நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுகடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
பிரதமர் தலையிட வேண்டும்! சவுரவ் கங்குலிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மம்தா பானர்ஜி
சினிமாவில் எத்தனை நடிகர்கள், நடிகைகள் போதை மருந்து எடுக்கிறார்கள் என யாருக்குத் தெரியும். இதில் நடிகைகள் மிகவும் மோசம். சினிமா துறையில் போதை மருந்து எல்லா இடத்திலும் புழங்குகிறது. பாலிவுட்டில் போதை மருந்து, அரசியலிலும் போதை மருந்து. தேர்தல் நேரத்தில் மது வினியோகம் நடக்கிறது. இந்தியா அனைத்துவிதமான போதைகளில் இருந்தும் விடுதலைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக புதியஇயக்கத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பாபா ராம் தேவ் தெரிவித்தார்