ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் ஊழல்! சுப்பிரமணியன் சுவாமி மனுவை ஏற்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By Pothy RajFirst Published Oct 17, 2022, 3:13 PM IST
Highlights

பல்வேறு வங்கிகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செய்த ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரிமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

பல்வேறு வங்கிகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செய்த ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரிமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும், சிபிஐ அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவே, பி.வி.நாகர்தனா இன்று உத்தரவிட்டனர்.

ஒரு தேசம் ஒரே உரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி உதவிதொகை

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில் “ ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏராளமானோர் கிங்பிஷர் நிறுவனம், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யெஸ் வங்கி உள்ளிட்ட  பல்வேறு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய ஸ்டேட் வங்கிச் சட்டம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீறியுள்ளனர். சட்டங்களை நேரடியாக மீறும் செயலில் உடந்தையாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். ஆதலால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

பலாத்காரம் செய்த பெண்ணை கண்டுபிடித்தால் திருமணம்: இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் வாய்ப்பு

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவே, பி.வி.நாகர்தனா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், “ உங்கள் மனுவைப் பரிசீலிக்கிறோம். ரிசர்வ் வங்கியும், சிபிஐ அமைப்பும், இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தனர்.

click me!