அரசு ஊழியர்கள் இனி 9 மணி நேரம் வேலை பார்க்கணும்… மத்திய அரசு அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Nov 5, 2019, 10:19 AM IST
Highlights

இந்தியாவில் ஊழியர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது..
 

நாடு முழுவதும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கோரிக்கை இருந்துவருகிறது. இந்நிலையில், மத்திய தொழிலாளர்துறை சார்பில் தொழிலாளர்களுக்கான ஊதிய விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கை குறித்து டிசம்பர் 1-ம் தேதிக்குள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்ள் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவு அறிக்கையில், ‘நாடு முழுவதும் 8 மணி நேரமாக இருக்கும் தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுகான செலவீனங்கள் குறைந்தபட்ச வருமானத்திலிருந்து 20 சதவீதம் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கான படிப்பு, மருத்துவச் செலவுகள் குறைந்தபட்ச வருமானத்தில் 25 சதவீதம் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வருமானத்தின் அளவீடுக்கு மக்கள் தொகை எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு பகுதியை மூன்றாகப் பிரித்துள்ளது. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி பெருநகரப் பகுதி என்றும், 10 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் வாழும் பகுதி பெருநகரம் அல்லாத பகுதி என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரைக்கு  எதிர்ப்புத் தெரிவித்துள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தாராகி வருகின்றனர்.

click me!