மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கு அனுமதி : உச்ச நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகம் ஒப்புதல்

 
Published : Oct 25, 2016, 07:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கு அனுமதி : உச்ச நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகம் ஒப்புதல்

சுருக்கம்

மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் சென்று வழிபட பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று, தர்கா நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தனர்.

மும்பையின் தெற்கே வோர்லி கடற்கரை தீவில் ஹாஜி அலி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. இந்த நடைமுறையை எதிர்த்து சில பெண்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வழிபாட்டு முறையில் பாலினப் பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறி, அந்தத் தடையை நீக்க உத்தரவிட்டது.

 இந்த தடையை நீக்கக் கோரி, திருப்தி தேசாய் தலைமையிலான ‘பூமாதா ரங்கராகினி பிரிகேடு' என்ற பெண்கள் அமைப்பு, போராடி வந்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, திருப்தி தேசாய் தன் ஆதரவாளர்களுடன் ஹாஜி அலி தர்காவிற்குள் சென்று வழிபாடு நடத்த சென்றார்.அப்போது அவரை சிலர் தடுத்து நிறுத்தினர். இதையும் மீறி, திருப்தி தேசாய் ஹாஜி அலி தர்காவிற்குள் சென்று பிராத்தனை நடத்தினார்.

இந்த நிலையில்தர்கா நிர்வாகிகள், ‘‘ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறையையே பின்பற்ற அனுமதிக்க வேண்டும்'’ என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு 6 வாரங்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தச் சூழலில்  தர்கா நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது, தர்கா நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஹாஜி அலி தர்காவுக்குள் இனி பெண்களையும் அனுமதிக்க தர்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளது’ என தெரிவித்தார்.இதையடுத்து, தர்காவுக்குள் பெண்கள் வருவதற்கு வசதியாக தேவையான கட்டமைப்புகளை இன்னும் 4 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என தர்கா நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!