அடுத்தவர் மனைவி மேல் தீரா காதல் - ரயில் நிலையத்தில் கொலை செய்த சைகோ கைது

 
Published : Oct 25, 2016, 06:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
அடுத்தவர் மனைவி மேல் தீரா காதல் - ரயில் நிலையத்தில் கொலை செய்த சைகோ கைது

சுருக்கம்

அடுத்தவர் மனைவி மீது தீராத ஆசை வைத்த நபர் ஒருவர் அந்த பெண் ஆசைக்கு இணங்காததால் , டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் அந்த பெண்ணை சராமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கொலை செய்யப்பட்ட பெண் பிங்கி, அங்குள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அழகு நிலையம் செல்வதற்காக மெட்ரோ ரயில் நிலையம் வந்த பிங்கியை, அவரின் பின்னால் வந்த ஜிதேந்தர் என்பவர், கத்தியால் பல முறை குத்தியுள்ளார். கத்தியால் குத்திய நபரை பொது மக்கள் வளைத்து பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் பிங்கியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனை செல்வதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிங்கியைக் கத்தியால் குத்திய ஜிதேந்தரை, பொதுமக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிங்கியை ஒருதலையாக காதலித்து வந்ததாக ஜிதேந்தர் கூறியுள்ளார். 

பிங்கியின் கணவர் மான்சிங் கூறும்போது, ஜிதேந்தர் என்னிடமும், பிங்கியிடமும் பல முறை சண்டை போட்டுள்ளார். என் மனைவியை என்னிடமிருந்து அழைத்த சென்று விடுவதாகவும் மிரட்டினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், இது தொடர்பாக ஜிதேந்தருடன் கைகலப்பு கூட  ஏற்பட்டது. ஆனால், அது குறித்து போலீசிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இன்று பிங்கியை ஜிதேந்தர் கொலை செய்துள்ளான் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!