குழந்தைகளின் முன்னே பாலியல் சீண்டல்..! உயிரை மாய்த்த பெண்..! கலங்கவைக்கும் சம்பவம்..!

 
Published : Nov 09, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
குழந்தைகளின் முன்னே பாலியல் சீண்டல்..! உயிரை மாய்த்த பெண்..! கலங்கவைக்கும் சம்பவம்..!

சுருக்கம்

woman suicide due to sexually harassed in front of child

தனது மகன்களின் கண்முன்னே சக ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்ததால் மனமுடைந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு எச்.ஏ.எல் நெல்லுருபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. 

உணவகம் சார்ந்த அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அப்பெண்ணுக்கு, அதே அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த மகந்தேஷ் என்பவர் அந்த பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் சீண்டல்கள் செய்துவந்துள்ளார். சில நேரங்களில் மிகவும் மோசமான அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவருடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றபிறகு, சதீஷ் என்ற தனது நண்பருடன் வீட்டிற்கு சென்ற மகந்தேஷ், தன்னுடன் உறவு கொள்ளுமாறு பெண்ணை வற்புறுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக கணவரிடம் கூறினால், குழந்தைகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அந்த பெண்ணிடம் மகந்தேஷ் பாலியல் சீண்டல்களை செய்து அடித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அந்த பெண்ணின் சிறுவயது மகன்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். தனது மகன்களின் கண்முன்னே தன்னை பாலியல் சீண்டல்கள் செய்ததை சகித்துக்கொள்ள முடியாத அந்த பெண், இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் மகந்தேஷை கைது செய்துள்ளனர். மகந்தேஷூடன் சென்ற அவரது நண்பரான சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!