டிரைவர் இல்லாமல் 13 கி.மீ சென்ற ‘சென்னை ரெயில் எஞ்சினால்’ பரபரப்பு

 
Published : Nov 09, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
டிரைவர் இல்லாமல் 13 கி.மீ சென்ற ‘சென்னை ரெயில் எஞ்சினால்’ பரபரப்பு

சுருக்கம்

The train rammed into the Kalaiparki Vady Railway Station the Railway Station which ran for 13 km at a speed of 30 km.

கர்நாடக மாநிலம், கலாபுர்க்கி வாடி ரெயில் நிலையத்தில் டிரைவர் இல்லாமல் ரெயில் எஞ்சின் மட்டும் 30 கி.மீ வேகத்தில் 13 கி.மீ வரை ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பைக்கில் விரட்டிச் சென்ற டிரைவர் ‘பிரேக்’ போட்டு நிறுத்திபெரும்விபத்தில் இருந்து காத்தார்.

சென்னை ரெயில்

சென்னையில் இருந்து மும்பைக்கு ‘தி மும்பை ெமயில்’ என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு கலாபுர்க்கியின் வாடி ரெயில் ரெயில்நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. 

அங்கிருந்து சோலாப்பூர் வரை டீசல் எஞ்சினில் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக, மின்சாரத்தில் இயங்கும் எஞ்சினைகழற்றிவிட்டு, டீசல் எஞ்சினை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

தானாக ஒடியது

ரெயில் எஞ்சினை நிறுத்திவிட்டு, டிரைவர் டீசல் எஞ்சின் பொருத்தும் பணிக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில் ரெயில்எஞ்சின் தானாகவே புறப்பட்டு தண்டவாளத்தில் ஓடத் தொடங்கியது.

உத்தரவு

இதைப் பார்த்த ரெயில் நிலைய அதிகாரிகள், அடுத்தடுத்து உள்ள ரெயில் நிலையங்களுக்கு தகவல் அளித்து, சிக்னல்களைஒழுங்கு படுத்தவும், எதிரே எந்த ரெயிலும் வராமல் பார்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

பைக்கில் விரட்டி பிடித்தார்

இதையடுத்து, டிரைவர் பைக்கில் எஞ்சினை துரத்திக்கொண்டு சென்றார், ஏறக்குறைய 30 கி.மீ வேகத்தில் சென்ற ரெயில்எஞ்சின் இரு ரெயில்வே கேட்களை கடந்து சென்று நல்வார் எனும் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது வேகம் குறைந்தது. ரெயில் எஞ்சினை விரட்டிப் பிடித்த டிரைவர் அதில் ஏறி பிரேக் போட்டு எஞ்சினை நிறுத்தினார். 3.30 மணிக்கு புறப்பட்ட ரெயிலை 3.50 மணிவரை டிரைவர் விரட்டியுள்ளார்.

விபத்தில் இருந்து தப்பித்தது

இது குறித்து வாடி ரெயில் நிலைய மேலாளர் ஜே.என். பாரீஸ் கூறுகையில், “ எதிர்திசையில் ரெயில் ஏதும் வந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்’’ என்றார். இந்த ரெயில் தானாக எப்படி ஓடியது?, விசாரணை ஏதும் நடத்தப்படுமா? என்பது குறித்து கேட்டதற்கு பதில் ஏதும் ரெயில்வே அதிகாரிகள் அளிக்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!