90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அத்வானி - பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

 
Published : Nov 08, 2017, 09:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அத்வானி - பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

சுருக்கம்

Bharatiya Janata Partys senior leader LK Advani Advani celebrated his 90th birthday

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது 90வது பிறந்தநாளை  கொண்டாடினார்.

குழந்தைகளுடன்

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேற்று 90-வது பிறந்த நாளாகும். தன்னுடைய பிறந்தநாளான நேற்று அத்வானி, தனது வீட்டில் மாற்றுதிறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். 90 பார்வையற்ற குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக வரவேற்க்கப்பட்டு  அவர்களுக்கு காலை உணவுகளை அத்வானி பரிமாறினார். மேலும் அவர்களுக்கு புத்தகப்பைவழங்கப்பட்டன.

டுவிட்டரில் மோடி வாழ்த்து

மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரின் டுவிட்டரில்ெவளியிட்டபதிவில் “ நான் மிகவும் மதிக்கும் மூத்த தலைவர் அத்வானிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ நான் வேண்டுகிறேன். பா.ஜனதாவை வழிநடத்துபவர்கள் எப்போதும் அத்வானியின் ஆலோசனையை பெற்றுக்கொள்வோம். பா.ஜனதாவை கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகள் உயர்ந்த பங்களிப்பை செய்துள்ளன’’ என்று தெரிவித்தார்.

வாழ்த்துக்கள்

மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், சட்ட அமைச்சர் மந்திரி ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சரத்யாதவ், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கபில் சிபல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.   

மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் அத்வானியை அவரது வீட்டிற்கு  நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்