அடப்பாவிங்களா... உணவு நல்லா இல்லன்னு சொன்னதுக்கு கொதிக்கிற எண்ணைய ஊத்துவீங்களா...! 

First Published Nov 9, 2017, 3:53 PM IST
Highlights
The hotel owner who tried to pour boiling oil on the customer


உணவு சரியில்லை என்று கூறியதால், வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்ற முயன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாசன் பகுதியில் சாலையோர உணவகம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஏராளமானோர் வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்வர்.

இந்த நிலையில், இந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், உணவு சாப்பிட்ட பிறகு, உணவு மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். வாடிக்கையாளர், தான் செய்த உணவை குறை கூறியதற்காக, அங்கு கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை, குறைகூறிய வாடிக்கையாளர் மீது ஊற்ற முயன்றுள்ளார். இதனைப் பார்த்த வாடிக்கையாளர் அலறி அடித்தபடி ஓடியுள்ளார். 

ஆனால், உணவக உரிமையாளர், அந்த வாடிக்கையாளரை துரத்திக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரது கையில் கொதிக்கும் எண்ணெய்யும் மற்றொரு கையில் கம்பு ஒன்றையும் வைத்துக் கொண்டு அவரை துரத்தி சென்றுள்ளார்.

உணவக உரிமையாளர், வாடிக்கையாளரை துரத்திக் கொண்டு செல்வது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவக உரிமையாளரிடம் தப்பிக்க முயன்ற வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!