Woman Swiggy Account Hacked : உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆன்லைன் மூலம் பெற உதவும் செயலியான ஸ்விக்கி கணக்கை ஹேக் செய்து மக்களை ஏமாற்றிய ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டில் குற்றம் சாட்டப்பட்ட அனிகேத் கல்ரா (வயது 25) மற்றும் ஹிமான்ஷு குமார் (வயது 23) ஆகியோர் ‘இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) முறையைப் பயன்படுத்தி மக்களின் ஸ்விக்கி கணக்குகளை ஹேக் செய்ய பயன்படுத்தியதாக போலீஸார் நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் கணக்கை ஹேக் செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கணக்கில் இருந்து மளிகை பொருட்களை ஆர்டர்களை செய்து, பின்னர் அதே பொருட்களை குறைந்த விலையில் வேறு இடங்களில் விற்றுள்ளனர். சுல்தான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், அடையாளம் தெரியாத சிலரால் தன் ஸ்விக்கி கணக்குடன் இணைக்கப்பட்ட தனது Lazy Pay கணக்கில் இருந்து ரூ.97,197 மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்த பின்னர் அந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
undefined
புகார்தாரருக்கு நள்ளிரவில் தன்னியக்க தொலைபேசி ஊடாடும் குரல் பதில் (IVR) அமைப்பிலிருந்து முன் பதிவு செய்யப்பட்ட குரல் பதில்களில் இருந்து யாரோ ஒருவர் தனது ஸ்விக்கி கணக்கை அணுக முயற்சிப்பதாகத் தெரிவிக்கும் அழைப்பு வந்தது. அதன் பிறகு, அவரது ஸ்விக்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அவரது Lazy pay கணக்கு ஹேக் செய்யப்பட்டு ஆன்லைனில் மொத்தம் ரூ.97,197 ஆர்டர் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது நடத்தப்பட்ட அழைப்பு விவரங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளின் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.
காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!
“மேலும், அழைப்பு எண்ணின் CDR பகுப்பாய்வில், புகார்தாரர் அழைப்பைப் பெற்ற மொபைல் எண், IVR சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டு அடிப்படையிலான உருவாக்கப்பட்ட எண் கண்டுபிடிக்கப்பட்டு. அதே நேரத்தில், ஸ்விக்கி நிறுவனத்திடமிருந்து விவரங்கள் பெறப்பட்டு அந்த இருவரை பிடித்துள்ளதாக காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) அங்கித் சவுகான் கூறினார்.
ஸ்விக்கி கணக்கை ஹேக் செய்ய ஹேக்கர்களால் பயன்படுத்தப்படும் செயல் முறை என்ன?
போலீசார் அதிரடி சோதனை நடத்தி அனிகேத் மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, அனிகேத் முன்பு Zomato மற்றும் Swiggy நிறுவனங்களில் டெலிவரி பாயாக பணிபுரிந்ததையும், IVR அழைப்பு முறை மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய செயல் முறையையும் வெளிப்படுத்தினார்.
"அதன்பிறகு, அவர் ஆன்லைன் விற்பனை தளங்களில் இருந்து சலுகைகள் மூலம் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வாங்கத் தொடங்கினார், பின்னர் அவற்றை சந்தையில் விற்கத் தொடங்கினார், இதனால் ஒவ்வொரு ஆர்டரிலும் 5 சதவிகிதம்-10 சதவிகிதம் அவர்களால் சேமிக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அவர் பஞ்சாபில் வசிக்கும் சக குற்றவாளியான அன்ஷுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து மக்களை ஏமாற்ற துவங்கியுள்ளனர்.
தங்கள் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங்கை தங்கள் ஸ்விக்கி கணக்குடன் இணைத்தவர்களின் ஒவ்வொரு விவரமும் அன்ஷிடம் இருந்துள்ளது. "முன் பதிவு செய்யப்பட்ட குரல் பதில்கள் மூலம் அவர்களின் Swiggy கணக்கை ஹேக் செய்து பாதிக்கப்பட்டவர்களின் ரகசியத் தகவல்களை அணுகுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து வந்துள்ளார் அன்ஷ்.
பின்னர் அனிகேத், போலி உரிமையில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை பாதிக்கப்பட்டவரின் ஸ்விக்கி கணக்குடன் இணைத்து, பின்னர் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் கிடைக்கும் தொகைக்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்,” என்று டிசிபி கூறினார். மேலும் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவர்கள் பொருட்களை வழங்க குருகிராமின் உள்ள பல்வேறு முகவரிகளை வழங்கியுள்ளனர்.
"அனிகேத்தும் அவரது நண்பர் ஹிமான்ஷுவும் உள்ளூர் சந்தையில் மளிகைப் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்று, பின்னர் 50 சதவீத லாபத்தை அன்ஷுக்கு பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் அல்லது பல்வேறு UPI ஐடிகள் மூலம் அனுப்புவார்கள்" என்று DCP கூறினார். குருகிராமில் மெடிக்கல் கடை வைத்திருக்கும் ஹிமான்ஷு, ஏமாற்றப்பட்ட தொகையை பல்வேறு யுபிஐ ஐடிகள் மற்றும் கணக்குகளுக்கும், மெடிக்கல் ஷாப் என்ற போர்வையில் மாற்றுவது வழக்கம் என்றும் அவர் கூறினார்.
"மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டுபிடிக்கவும், மேலும் இந்த வழக்கோடு சம்மந்தப்பட்டுள்ள பிற வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது" என்று டிசிபி மேலும் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது: பிரதமர் மோடி!