பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பெண் ஓடும் பைக்கில் இருந்து குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பெண் ஓடும் பைக்கில் இருந்து குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில், ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு, 30 வயதான பெண் ஒருவர் இந்திராநகருக்குச் செல்ல ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்தார். இரவு 11:10 மணியளவில் வந்த ஓட்டுநர் அப்பெண்ணை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.. 11 சிறப்பு காவல் படை வீரர்கள் பலி..
அப்போது பைக் ஓட்டுநர் ஓடிபி எண்ணை சரிபார்ப்பதாக கூறி பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு பைக்கை வேறு இடம் நோக்கி ஓட்டியுள்ளார். இதனால் அப்பெண் ஓட்டுநரிடம் எச்சரித்ததோடு சத்தம்போடத்தொடங்கினார். ஆனால் ஓட்டுநர் அதனை பொருட்படுத்தாததால் அப்பெண் ஓடும் பைக்கிலிருந்து குதித்துள்ளார்.
இதையும் படிங்க: 1978ல் இந்திரா காந்தி, 2023ல் பிரியங்கா காந்தி: பாட்டியைப் போல் சிருங்கேரி மடத்துக்கு வந்த பேத்தி!
இதை அடுத்து காவல்துறையினரிடம் அந்த பெண் புகாரளித்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது. அதன்படி தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேகமாக செல்லும் பைக்கில் இருந்து பெண் குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.