அம்மா வலி தாங்க முடியலயே; அரசுப் பேருந்தில் பிறந்த குழந்தை - கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

By Velmurugan s  |  First Published May 29, 2024, 10:48 PM IST

கேரளா மாநிலத்தில் ஓடும் அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அம்மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கேரளா மாநிலம் அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி கேஎஸ்ஆர்டிசிக்கு சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். பேருந்து பெரமங்கலம் காவல் நிலையம் அருகே வந்த போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

திடீரென பேச்சை நிறுத்திய காதலி; பெட்ரோல் குண்டு வீசிய விசிக பிரமுகரின் செல்லப்பிள்ளை - அரியலூரில் பரபரப்பு

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து அப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக உடன் பயணிப்பவர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் தெரிவித்துள்ளனர். பிரச்சினையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாக பேருந்தை அருகில் இருந்த அமலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பணத்திற்காக மனைவியை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி; முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுமணப்பெண்

ஆனால், மருத்துவமனையை சென்றடையும் முன்னரே அப்பெண்ணுக்கு பேருந்திலேயே குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையும், தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மருத்துவமனை வளாகத்திற்குள் பேருந்து வேகாக நுழைவதும், பேருந்தில் இருந்து குழந்தையும், தாயும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

click me!