கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பெண் உணவு விஷமானதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உணவு விஷமாகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரின் மூனுபிடிகாவில் உள்ள ஹோட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணி போன்ற அரபு வகை உணவான குழிமந்தி என்ற உணவை சாப்பிட்ட பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த ஜம்மு-காஷ்மீர்!
அந்த வகையில், உணவு விஷமாகி கடுமையான வயிற்று வலி, வாந்தி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசைபா (56) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதவிர, அந்த உணவகத்தில் உணவருந்திய 175 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழுமந்தி உணவுடன் பரிமாறப்பட்ட மையோனைஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதிகாப்பு அதிகாரிகள் உணவகத்துக்கு சீல் வைத்துள்ளதாக கைப்பமங்கலம் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.