இதுக்கு இந்த அடியா? கணவனிடம் வாங்கி கட்டிய மனைவி!

 
Published : Mar 08, 2018, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
இதுக்கு இந்த அடியா? கணவனிடம் வாங்கி கட்டிய மனைவி!

சுருக்கம்

woman beaten up husband switching off wifi

வைஃபை சுவிட் ஆப் செய்ததற்காக, மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்தின், சோமாஜிகுடா பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவருக்கும் ரேஷ்மா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்க 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

சுல்தானுக்கும், ரேஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவ நாளன்று சுல்தான் இரவில் நெட் பயன்படுத்தி வந்துள்ளார். ரேஷ்மா வைஃபை கனெக்சனை துண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த சுல்தான், ரேஷ்மாவை கடுமையாக தாக்கி இருக்கிறார்.

சுல்தான் தாக்கியதில், ரேஷ்மாவின் முகம், நெஞ்சு, கை என உடல் முழுக்க பயங்கர காயம் ஏற்பட்டது. ரேஷ்மாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்தனர். ரேஷ்மாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரேஷ்மா தாக்கப்பட்டது குறித்து, அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மனைவியை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் புகார் அளித்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சுல்தான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுல்தானுக்கு மனநோய் பாதிப்பு உள்ளதா என்றும் சோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்