
ஹெச் ராஜாவால் தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். டெல்லிக்கு வரவழைத்த பாஜக தலைவர்கள் தேசிய தலைவர் ஹெச்.ராஜாவுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
பெரியார் சிலைகளைத் தகர்ப்போம் எனப் பதிவிட்ட ஹெச்.ராஜா கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் இருந்தார் இதற்க்கு முன்பாக டெல்லியிலிருந்து ராஜாவைத் தொடர்புகொண்டு பேசிய முக்கியப் பிரமுகர் ஒருவர் அவரை உடனே டெல்லிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். இந்த அழைப்பால் அய்யய்யோ நம்மை துளைதேடுக்கு கூப்பிடுகிறார்கள் என பயந்து அவசர அவசரமாக நேற்று முன் தினமே அவர் டெல்லி கிளம்பிப் போனார்.
அவர் அங்கு சென்ற அதே நேரத்திலிருந்து இப்போதுவரை அவரது முகநூல் பதிவு தமிழகம் முழுவதுமாக பட்டிதொட்டி எங்கும் பற்றியெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை, டெல்லியில் பிஜேபி தலைமை அலுவலகத்தில் சிலரைச் சந்தித்திருக்கிறார் ஹெச்.ராஜா.
அப்போது, ‘உங்களுக்கு எதுக்குங்க இந்த தேவையில்லாத வேலை? இப்போ பாருங்க சர்ச்சை ஆயிடுச்சி இதெல்லாம் நமக்கு தேவையா? உங்களால எல்லோருக்கும் சங்கடமாகிடுச்சு...’ என்று ராஜாவைக் கண்டமேனிக்கு கத்தியிருக்கிறார்கள். அதற்கு அவரோ, ‘பெரியாரை திட்டினால், நமக்கு தமிழகத்தில் செல்வாக்கு எகிறும். அங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால், டெல்லி தலைவர்களோ ராஜா சொன்னதை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
நீங்க சொல்றதெல்லாம் ஒன்னுத்துக்கும் புண்ணியமில்லாத கதை, நீங்க செஞ்ச இந்த வேலையால ‘தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தலைவர்களே உங்க மீது கடுமையான செம்ம கடுப்பில் இருக்காங்க. நீங்க அவசரப்பட்டு இப்படி எதாவது செஞ்சுடுறீங்க. அப்புறம் எப்படிங்க நம்மளால தமிழ்நாட்டுல நாம ஸ்டிராங் ஆக முடியும்? நாங்களும் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறோம். இந்தச் சூழ்நிலையில் நீங்க செஞ்சது நமக்கு மறுபடியும் அதல பாதாளத்துக்கு கொண்டு வந்துட்டிங்களே என கத்தினாராம்.
நீங்க உடனே இதுக்கு மன்னிப்பு கேட்டுடுங்க. எனக்கு தெரியாமல் அட்மின் போட்டதாக மீடியாவுக்கு சொல்லிடுங்க..’ கொஞ்சம் நாளைக்கு தமிழ் நாட்டு பக்கம் போயிடாதிங்க என்று ஐடியா கொடுத்ததும் டெல்லி தலைகள் தானாம். அதன் பிறகுதான் மீடியாவை கூப்பிட்டு, அட்மின் என அல்லிவிட்டுருக்கிறார் ராஜா. ‘இது சம்பந்தமாக இனி டெல்லியில் உள்ள தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் நீங்களாக எந்தக் கருத்தும் சொல்லாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் அதைக் கட்சியோட கருத்தாகத்தான் பார்க்கிறாங்க.’ என்றும் அட்வைஸ் தெளிய வைத்து செய்து அனுப்பியிருக்கிறார்கள்.