பெண் பயணி, சக பயணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். குற்றம் சாட்டப்பட்ட சக பயணி மன்னிப்பு கோரினார். இதனால் பெண் பயணி எந்த எழுத்துப்பூர்வ புகாரையும் பதிவு செய்யாமல் சென்றுவிட்டார்.
பாக்டோக்ரா செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், சக பயணி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறியுள்ளார் என விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெண் பயணியின் புகாரை அடுத்து விமான கேபின் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட ஆண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றினர் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"ஜனவரி 31 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானம் SG 592 கொல்கத்தாவில் இருந்து பாக்டோக்ராவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் பயணி தனது சக பயணியின் தகாத நடத்தை குறித்து குற்றம் சாட்டினார். கேபின் குழுவினர் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சரிசெய்தனர்" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டியர் ஸ்டூடண்ட்ஸ்... ஸ்கிரீன் டைம் குறைய இதைப் பண்ணுங்க... பிரதமர் மோடி கொடுக்கும் எக்ஸாம் டிப்ஸ்!
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட சக பயணி தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியதாகவும் அவர் கூறினார்.
"பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு வந்தவுடன், இரு பயணிகளும் ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பு ஊழியர்களால் விமான நிலைய அதிகாரிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். பெண் பயணி, சக பயணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். குற்றம் சாட்டப்பட்ட சக பயணி மன்னிப்பு கோரினார். இதனால் பெண் பயணி எந்த எழுத்துப்பூர்வ புகாரையும் பதிவு செய்யாமல் சென்றுவிட்டார்" என்றும் அவர் கூறினார்.
"இந்தச் சம்பவத்தில் எங்கள் கேபின் குழுவினர் பெண் பயணிக்கு அனைத்து உதவிகளும் செய்தனர். அவரது வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்தனர்" என்றும் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
AI மூலம் மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்... அப்ப மேட்ரிமோனி வெப்சைட் எல்லாம் வேஸ்டா...